பூவரசு (மட்டக்களப்பு இதழ்)
பூவரசு இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ஒரு காலாண்டு கலை இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் சனவரி, மார்ச்சு இதழாக 1996ம் ஆண்டில் வெளிவந்தது. விலை ரூபாய் 15.00
ஆசிரியர்கள்
- சாருமதி
- வாசுதேவன்
தொடர்பு முகவரி
பூவரசு 37 8ம் குறுக்கு, வேலூர் கல்லடி, மட்டக்களப்பு
உள்ளடக்கம்
ஒரு கலை இலக்கிய சஞ்சிகை என்றடிப்படையில் சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் மற்றும் கட்டுரைகள் போன்றன இடம்பெற்றிருந்தன.