பூதனார்
பூதனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது.
அது நற்றிணையின் 29 ஆம் பாடலாகும்.
பாடல் சொல்லும் செய்தி
- மகளை அவளது காதலனுடன் அனுப்பிவிட்ட செவிலி சொல்கிறாள்.
- நான் என் மகளை மார்போடு அணைத்தேன். அவள் கண்ணீர் மல்கப் பெருமூச்சு விட்டாள். அவன் அணைக்காத ஏக்கம்
- இப்போது பாலை வழியில் எப்படிச் செல்கிறாளோ? உணவு கிடைக்காத புலி வழிப்போக்கர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழியாயிற்றே! - என்று செவிலி நினைக்கிறாள்.