பூண்டி குமாரசாமி

பொன்னம்பலம் குமாரசாமி (Poondi Kumaraswamy)(பூண்டி குமாரசாமி எனக் குறிப்பிடப்படுகிறார்) (அக்டோபர் 4, 1930 - மார்ச் 9, 1988) என்பவர் இந்தியாவின் முன்னணி நீரியலர் ஆவார்.[1] இவர் 1972ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தின் சக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டியில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் குடிசார் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றார். 1988ஆம் ஆண்டில் இவர் இறப்பதற்கு முன், 57 வயதில், ஹோமி பாபா ஆய்வு நிதியினையும் (1967-69) மற்றும் ஜவஹர்லால் நேரு ஆய்வு நிதியினையும் 1975-77, [3] ஒரு சேரப் பெற்றவர் இவர் ஒருவர்தான்.[4] இவர் தனது பெரும்பான்மையான நேரத்தை மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்திலும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்திலும் கழித்தார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்ப கழகம், கேம்பிரிட்சியில், நிலத்தடி நீர் மாதிரி ஆராய்ச்சி மேற்கொண்டார்.

ஜவஹர்லால் நேரு ஆய்வுநிதக் காலத்தில், கணித மாதிரிகள், ஹைட்ராலிக் கட்டமைப்புகளின் விவரங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தமிழக இந்தியாவின் முதல் விரிவான 20 தொகுதி நீர்நிலை வரைபடத்தினை இவர் உருவாக்கினார். இவர் இரட்டை எல்லைக்குட்பட்ட நிகழ்தகவு அடர்த்தி செயல்பாடு (குமாரசாமி பரவல்), பொதுவாக வரம்புக்குட்பட்ட இயற்பியல் மாறிகளுக்கு ஏற்ற நிகழ்தகவு அடர்த்தி செயல்பாடு ஆகியவற்றை உருவாக்கினார். மின், சிவில், இயந்திரவியல் மற்றும் நிதி பொறியியல் பயன்பாடுகளில் குமாரசாமி பரவல் பயன்பாட்டில் உள்ளது. இவர் முதல் ஆய்வகச் சோதனை கடினப் பாறை கிணறு கோட்பாட்டை[5] வழங்கினார். இதற்காக 1974ஆம் ஆண்டில் இந்தியப் புவி நீரியலாளர்களிடமிருந்து தங்கப் பதக்கம் வென்றார். திருச்சிராப்பள்ளி கொதிகலன் ஆலை, மற்றும் தூத்துக்குடி துறைமுக திட்டம் ஆகிய இரண்டு பெரிய தொழில்துறை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பொறியாளராகவும் பணியாற்றினார். கூடுதலாக, தென்னிந்தியா முழுவதும் ஏராளமான அணைகள், கால்வாய்கள் மற்றும் பிற நீர்ம இயக்கவியல் கட்டமைப்புகளின் நீர்ம இயக்க வடிவமைப்பில் இவர் ஈடுபட்டார். நீர்ம இயக்கவியல் மற்றும் நீரியல் நிறுவனம், பூண்டி செயல்பாடுகளைப் பொறியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அல்லாதவர்களுக்கு விளக்கிக் கூறுவதைக் கடமையாகக் குமாரசாமி கொண்டிருந்தார். [6]

ஈ. வெ. இராமசாமியால் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவாளர் மற்றும் மனிதநேய வாதி என அனைவரிடமும் இவர் நன்கு அறியப்பட்டார். இந்திய அவசரக் காலங்களிலும் (1975) பெரியாரைப் பின்தொடர்பவர்களில் ஒருவராக இருந்தார். இவர் பெரியாரின் சீடரான கி. வீரமணியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.


மேற்கோள்கள்

  1. http://alberteinstein.info/vufind1/Record/EAR000021872 பரணிடப்பட்டது 2017-04-16 at the வந்தவழி இயந்திரம் Catalogue details about a philosophical correspondence of Albert Einstein to Kumaraswamy when he was a young research engineer at Poondi
  2. http://www.ias.ac.in/describe/fellow/Kumaraswamy,__Ponnambalam list of Fellows of the Indian Academy of Sciences
  3. http://www.jnmf.in/flist.html list of Jawaharlal Nehru Fellows
  4. http://homibhabhafellowships.com/HomiBhabhaFellowsList.aspx Mr. P. Kumaraswamy
  5. Journal of Hydraulics Division (Vol 108(10), Oct 1982, pages 1194-1207) of the American Society of Civil Engineers for citation of his work on hard-rock well theory
  6. https://thefederal.com/states/south/tamil-nadu/poondi-reservoir-at-75-chennais-first-reservoir-to-quench-the-thirst-of-the-city-is-now-parched/
"https://tamilar.wiki/index.php?title=பூண்டி_குமாரசாமி&oldid=25819" இருந்து மீள்விக்கப்பட்டது