பூஜா தேவரியா
பூஜா தேவரியா (Pooja Devariya) ஒரு இந்திய திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்து வரும் ஒரு நடிகையார். இவர் தமிழ் திரையுலகில் தோன்றி வருகிறார். செல்வராகவனின் மயக்கம் என்ன (2011) என்றத் திரைப்படத்தில் அறிமுகமானர். அதற்கு பிறகு, 2015 ஆம் ஆண்டில் படங்களுக்குத் திரும்புவதற்கு முன்பு, ஸ்ட்ரே பேக்டரி என்ற நாடக நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். [1] தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள அடையாறிலுள்ள புனித மைக்கேல் அகாதமியில் தனது உயர்நிலைப் பள்ளியை முடித்தார்.
பூஜா தேவரியா | |
---|---|
பிறப்பு | பூஜா பாலு 29 சூலை 1991 பெங்களூர், கருநாடகம் |
மற்ற பெயர்கள் | இராஸ்கல் பாப்பா |
பணி | மேடையிலும், திரையிலும் நடிக்கும் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011 - தற்போது வரை |
தொழில்
2010 ஆம் ஆண்டில், இவர் ஸ்ட்ரே பேக்டரி என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார். நிறுவனத்துடன் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இணையவழி வீடியோக்களில் பணியாற்றியுள்ளார். [2] [3] டர்ட்டி டான்சிங் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பின் போது, இவரை, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது கணவருக்கு பரிந்துரைத்தார். மேலும் நடிகை தனது "மயக்கம் என்ன" (2011) படத்தில் நடிகர் தனுஷுடன் பத்மினி என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டில், இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி, இயக்குநர் மணிகண்டன். எம் இயக்கியிருந்த குற்றமே தண்டனை உள்ளிட்ட ஆறு படங்களில் நடித்துள்ளார். [4] [5]
ஒரு விளம்பர நடிகையாக, இவர் நடிகர் நரேன் வெயிஸுடன் இந்தியா டுடே பத்திரிகையின் அட்டைப்படத்தில் பல முறை தோன்றியுள்ளார். [6] மேலும், இவர், "மாயா பிரம் மதுரை" என்ற நாடகம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
குறிப்புகள்
- ↑ "Pooja Balu, Stray Factory". http://www.newindianexpress.com/cities/chennai/Pooja-Balu-Stray-Factory/2013/07/02/article1662374.ece1.
- ↑ RAVEENA JOSEPH. "Busting the Madrasi myth". http://www.thehindu.com/features/metroplus/society/busting-the-madrasi-myth/article6567644.ece.
- ↑ LAKSHMI KRUPA. "A short and sweet debut". http://www.thehindu.com/features/friday-review/theatre/a-short-and-sweet-debut/article4894784.ece.
- ↑ D Meera Chithirappaavai. "Iraivi's first look will be released well before Diwali 2015". http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/iraivi-first-look-will-be-released-well-before-diwali-2015.html.
- ↑ "Illayaraja teams up with `Kaaka Muttai` director". Sify.com. 2015-07-16 இம் மூலத்தில் இருந்து 2015-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151104125111/http://www.sify.com/news/illayaraja-teams-up-with-kaaka-muttai-director-news-others-phqnuseheehcf.html.
- ↑ "Naren Weiss Twitter". n.d.. https://twitter.com/NarenWeiss/status/697910626710990848?lang=en.