பீஷம் சாஹ்னி
பீஷம் சாஹ்னி (Bhisham Sahni; 8 ஆகத்து 1915 – 11 சூலை 2003) ஓர் இந்தி மொழி எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், நடிகரும் ஆவார். பாக்கித்தான் நாட்டின் இராவல்பிண்டியில் பிறந்த இவர் பாக்கித்தான் பிரிவினையின் அவலங்கள் குறித்து எழுதிய தமசு (இருள்) என்ற புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும். இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சப்பான், குசராத்தி, மலையாளம், காஷ்மீரி, மணிப்புரி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தொலைக்காட்சித் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் 1998ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான இந்திய அரசின் பத்ம பூசண் விருதினைப் பெற்றார்.[1] நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரது தமசு நூலுக்கு 1975ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் 1979-ல் சிரோமணி எழுத்தாளர் விருது, உத்தரப்பிரதேச மாநில அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் புகழ்பெற்ற இந்தி நடிகர் பல்ராஜ் சாஹ்னியின் இளைய சகோதரர் ஆவார்.
இயற்பெயர் | பீஷம் சாஹ்னி |
---|---|
பிறந்ததிகதி | 8 ஆகத்து 1915 |
பிறந்தஇடம் | இராவல்பிண்டி, பாக்கித்தான் |
இறப்பு | 11 சூலை 2003 | (அகவை 87)
பணி | எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர் |
காலம் | 1955–2003 |
கையொப்பம் |
மேற்கோள்கள்
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: 21 July 2015.