பி. வி. வனஜா பாய்

பானியம் வுப்பு வனஜா பாய் (Panyam Vuppu Vanaja Bai நவம்பர் 27, 1930 – ஆகஸ்டு 10, 2007) இவா் ஒரு இந்திய சமூக செயற்பாட்டாளர், சிந்தனையாளர், சமூக ஆர்வலர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தீவிர அரசியல் தலைவா். அவள்எ ளியவருக்கு கல்வி அளித்தல், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல துறைகளில் அவள் ஈடுபட்டவராவார். அவள் மகிளா சமாஜத்தின் நிறுவனர் ஆவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

வனஜா பாய் நவம்பர் 27, 1930 இல் சென்னை மாகாணத்தில் பிறந்தார். அவளை தந்தை, பல்லாய் வெங்கட சுபா ராவ், பிரித்தானிய ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் ஒரு சிவில் ஊழியராகப் பணியாற்றினார்.[2]

தொழில்

வனஜா பாய் நல்வாழ் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர் மற்றும் பன்யாமில் உள்ள சாரதா மகிளா மண்டலத்தின் தலைவராகவும் இருந்தார். அவள் குண்டக்கல் ரயில்வே பிரிவு குழுவில் உறுப்பினராகவும், சர்க்கரை தொழிற்சாலை இயக்குநராகவும், பன்யாம் கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராகவும் இருந்தாா்.

கர்னூல் மாவட்டத்தின் மாவட்ட காங்கிரஸ் குழு உறுப்பினர்.[3] கர்னூல் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஸ்தாபிக்கப்பட்டதில் அவளை பங்கு குறிப்பிடத்தக்கது.[4] அவள் இந்திய தேசிய காங்கிரஸ் இன் சார்பில் மகளிர் மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி பற்றி மைசூாில் உரை நிகழ்தினாா்.[5]

பன்யாம் கிராம வளர்ச்சிக்காகத் தனது பல நிலங்களை நன்கொடையாக அளித்தார். கர்னூலில் இந்திய தேசிய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றும் போது அவள் ஐ.என்.சி யின் தலைமையில் சமூக பிரச்சினைகளைக் குறித்து ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தினார், மேலும் பல உரையாடல்களை நிகழ்த்தினாா். அவள் ஒரு மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகள் கல்வி கற்கும் தனது முயற்சிகளுக்கு அவள் மிகவும் அறியப்பட்டவராக திகழ்ந்தாா்.[6]

மகிளா சமாஜம்

ஏப்ரல் 16, 1962 இல், வனஜா பாய் மகிளா சமாஜம் (மகளிர் மேம்பாட்டு சங்கம்) என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் அவள் முதல் தலைவராகவும், பொருளாளராகவும் இருந்தார்.[7]

மேற்கோள்கள்

  1. Ajīta Kaura,Arpana Cour (1976). Directory of Indian Women Today, 1976. India International Publications. பக். 434. https://books.google.co.in/books?id=PAkuAAAAYAAJ. 
  2. Ajīta Kaura,Arpana Cour (1976). Directory of Indian Women Today, 1976. India International Publications. பக். 434. https://books.google.co.in/books?id=PAkuAAAAYAAJ. 
  3. Ajīta Kaura,Arpana Cour (1976). Directory of Indian Women Today, 1976. India International Publications. பக். 434. https://books.google.co.in/books?id=PAkuAAAAYAAJ. 
  4. Business India, Issues 469-473. A. H. Advani. 1996. https://books.google.co.in/books?id=y9siAQAAMAAJ&q=p+v+Vanaja+bai&dq=p+v+Vanaja+bai&hl=en&sa=X&ved=0ahUKEwjb35vZv4bTAhVGr48KHerCCj0Q6AEIGTAA. 
  5. India. Office of the Registrar General, P. Padmanabha. Census of India, 1971: Mysore, Part 2, Volume 2. Manager of Publications - Karnataka (India). https://books.google.co.in/books?id=fP4_AAAAMAAJ&dq=p.v.vanaja+bai&focus=searchwithinvolume&q=vanaja+bai. 
  6. India. Central Social Welfare Board. Research, Evaluation, and Statistics Division, Central Social Welfare Board (India). Research, Evaluation, and Statistics Division, Leela Moolgaokar,1979 (1979). Directory of Social Welfare Agencies in India, Andhra Pradesh, Volume 2. Research, Evaluation, and Statistics Division, Central Social Welfare Board - Charities. பக். 1167. https://books.google.co.in/books?id=DoMEAAAAMAAJ. 
  7. Social Welfare,Volumes 23-24. Central Social Welfare Board. 1978. பக். 28. https://books.google.co.in/books?id=AkH5XLp7Dv8C&q=Vanaja+bai&dq=Vanaja+bai&hl=en&sa=X&ved=0ahUKEwi0q6uCu4bTAhXIM48KHXlID1gQ6AEIJTAC. 
"https://tamilar.wiki/index.php?title=பி._வி._வனஜா_பாய்&oldid=27484" இருந்து மீள்விக்கப்பட்டது