பி. லூர்து சாமி


பி. எல். சாமி என்றும் பி. லூர்து சாமி (பிறப்பு: 1925 இறப்பு:??) என்றும் அழைக்கப்படும் இவர் தமிழில் பல கட்டுரைகளையும், மூன்றுக்கும் மேலான நூல்களையும் எழுதியவர். செடியினவியல், விலங்கியல், பறவையியல் ஆகிய துறைகளில் இவர் தமிழில் எழுதிய நூல்கள் முதன்மையானவை.

பி. லூர்து சாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
பி. லூர்து சாமி
பிறந்ததிகதி 1925
அறியப்படுவது எழுத்தாளர்

இவர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியத்தின் முதல் முதன்மைப்பதிப்பாசிரியர் ஆவார்.அதன் முதல் தொகுதி இவரது பொறுப்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.[1]

கீழ்வாலை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை என்பதை முதன்முதலில் இனங்கண்டவர்.இது பற்றிய கட்டுரையை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழ்க்கல்சர்" இதழில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் "கீழ்வாலை எழுத்துகள்-ஒரு விளக்கம்" என்ற குறுநூலையும் எழுதினார்.

எழுதிய நூல்கள்

  1. இலக்கியத்தில் அறிவியல்; சேகர் பதிப்பகம், சென்னை,
  2. இலக்கிய ஆய்வு (அறிவியல்); சேகர் பதிப்பகம், சென்னை
  3. தமிழகத்தில் தாய்த் தெய்வ வழிபாடு; என்.சி.பி.ஹச், சென்னை.
  4. கம்பன் காவியத்தில் உயிரினங்கள்; கம்பன் கழகம், புதுவை
  5. கீழ்வாலை எழுத்துகள்-ஒரு விளக்கம்
  6. சங்க இலக்கியத்தில் நிலைத்திணையியல் விளக்கம்
  7. சங்க இலக்கியத்தில் செடி கொடிவிளக்கம்; 1967; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  8. சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்; 1970; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  9. சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்; மே 1976; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  10. சங்க நூல்களில் மீன்கள்; சேகர் பதிப்பகம், சென்னை
  11. சங்க நூல்களில் மணிகள்; சேகர் பதிப்பகம், சென்னை
  12. சங்க நூல்களில் விந்தைப்பூச்சி; சேகர் பதிப்பகம், சென்னை
  13. சங்க நூல்களில் முருகன்: சேகர் பதிப்பகம், சென்னை
  14. தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்; 23-2-1984; சேகர் பதிப்பகம், சென்னை
  15. Common Names and Myths of the Flora and Fauna Dravidian Indo-Aryan Languages; சேகர் பதிப்பகம், சென்னை

இது தவிர இவர் சங்க இலக்கியத்தில் நீரின விளக்கம் என்னும் நூலையும் உருவாக்கி வந்தார்.[2] வெளியான செய்தி கிடைக்கவில்லை.

குறிப்பு

  1. அறிவியல் களஞ்சியம்,தொகுதி ஒன்று,தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1987.
  2. சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் நூலின் பதிப்புரையில் உள்ள செய்தி
"https://tamilar.wiki/index.php?title=பி._லூர்து_சாமி&oldid=5081" இருந்து மீள்விக்கப்பட்டது