பி. சுப்பிரமணிய யாதபதித்தயா

பி. சுப்பிரமணிய யாதபதித்தயா (P. Subrahmanya Yadapadithaya) என்பவர் கருநாடக மாநிலத்தினைச் சார்ந்த இந்திய கல்வியாளர் ஆவார். இவர் மங்களூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் சூன் 2019 முதல் சூன் 2023 வரை நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.[1][2]

துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சுப்பிரமணிய யாதபதித்தயா, மங்களூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். சுப்பிரமணிய யாதபதித்தயா, 1982ஆம் ஆண்டில் மங்களூர் பல்கலைக்கழக முதுநிலை வணிகவியல் பிரிவின் முதல் தொகுதி மாணவராக. முதல் தரவரிசையுடன் தங்கப் பதக்கம் பெற்றார். 1992இல் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

சுப்பிரமணியா மங்களூர் பல்கலைக்கழகத்தின் முதல் முன்னாள் மாணவத் துணைவேந்தர் என்ற பெருமையினைப் பெற்றார்.[4] 27 ஆகத்து 2022 அன்று புது தில்லியில் நடைபெற்ற இரண்டாவது உயர் கல்வி மற்றும் கண்டுபிடிப்பு உச்சிமாநாட்டின் போது இவருக்குச் சிறந்த துணைவேந்தர் விருது வழங்கப்பட்டது.[5][6]

சுப்பிரமணிய யாதபதித்தயா சமீபத்தில் சூன் 2024-இல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோரண்ட்லாவில் உள்ள பாரதியப் பொறியியல் அறிவியல் தொழில்நுட்பப் புதுமைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.

மேற்கோள்கள்