பி. சி. ஸ்ரீராம்

பி. சி. ஸ்ரீராம் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆவார். இவர், சென்னை திரைத்துறைப் பயிலகத்தின் மாணவர்களுள் ஒருவராவார். இவர் இயக்கிய 'குருதிப்புனல்' எனும் திரைப்படம், ஆஸ்கார் விருதிற்காக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நாயகன், அலைபாயுதே, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் திரைப்படங்களில் பணியாற்றினார்.

பி. சி. ஸ்ரீராம்
PC Sreeram at the Oh Kadhal Kanmani aka OK Kanmani Audio Success Meet .jpg
பிறப்பு26 சனவரி 1956 (1956-01-26) (அகவை 68)[1]
மதராசு,
மதராசு மாநிலம்
(தற்போது சென்னை, தமிழ்நாடு) இந்தியா
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1982 – தற்போது வரை

வாழ்க்கையும், கல்வியும்

இவரின் பூர்வீகம் பாலக்காடு. பிறந்தது 1956 இல். படித்தது வளர்ந்தது சென்னையில். இவரது பெற்றோர்: சந்திரமௌலி - சாந்தா. சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்தார்.

பணிமுறை

இவரது ஒன்பது வயதில் இவரின் தாத்தா பரிசளித்த 'பிரெளனி' கேமராவில் ஆரம்பித்தது இவரது ஒளிப்பதிவு. விளம்பரப் படங்கள், போஸ்டர்கள் என்று இவருக்கு பிடித்தமாதிரியாக இவருடைய திறமையை பயன்படுத்தி வருபவர்.[2]

ஒளிப்பதிவாளராக

பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியல்:

தமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ஜீவா, கே. வி. ஆனந்த், கே. வி. குகன் ஆகியோர் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இயக்குனராக

  • 1992ஆம் ஆண்டில் 'மீரா' எனும் தமிழ்த் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.
  • தொடர்ந்து 'குருதிப்புனல்' எனும் திரைப்படம் (1995).
  • ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘வானம் வசப்படும்’ எனும் திரைப்படம் (2004)

விருதுகள்

1988 ஆம் ஆண்டு - சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய திரைத்துறை விருது - 'நாயகன்' திரைப்படத்திற்காக

மேற்கோள்கள்

  1. "35th National Film Awards" (PDF). International Film Festival of India. p. 41. http://iffi.nic.in/Dff2011/Frm35thNFAAward.aspx. பார்த்த நாள்: 12 August 2012. 
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்109

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._சி._ஸ்ரீராம்&oldid=21361" இருந்து மீள்விக்கப்பட்டது