பி. எல். சிங்காரம்
பி. எல். சிங்காரம் (பிறப்பு: சனவரி 9 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தமிழ் நேசன் பினாங்கு அலுவலக நிர்வாகியாகப் பணியாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சமயக் கட்டுரைகள், பக்திக் கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
சமய ஈடுபாடு
கோவில்களிலும், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். சமய வகுப்புகளையும் பஜனை வகுப்புக்களையும் நடத்தி வருகிறார். பினாங்கு இந்து சபா, இராமகிருஷ்ணா சிரமம், தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ஆகியவற்றில் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றிவருகின்றார். பல கும்பாபிஷேக மலர்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நூல்கள்
- "ஞானப்பழம் நீ பாமாலை" (1990)
- "தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு" (1995)
- "பினாங்குத் தென்றல்" (கட்டுரைகள் - 2001).
பரிசில்களும், விருதுகளும்
- "பண்பாடு" விருது - குன்றக்குடி அடிகளார் வழங்கியது. (1982)
- PJK விருது - அரசாங்க விருது (1998).
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பி. எல். சிங்காரம் பக்கம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்