பிள்ளையோ பிள்ளை
பிள்ளையோ பிள்ளை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை, உரையாடலை எழுத,[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மு. கருணாநிதியின் சொந்த படம். இந்தப் படத்தை கிரஸன்ட் பிலிம்ஸ் தயாரித்தது.[2]
பிள்ளையோ பிள்ளை | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | செல்வம் அஞ்சுகம் பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மு. க. முத்து லட்சுமி |
வெளியீடு | சூன் 23, 1972 |
நீளம் | 4300 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் ஈடிஏ குழுமத்திற்கும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் செயலலிதா 2010இல் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.
மேற்கோள்கள்
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ ராண்டார் கை (9 சூலை 2016). "Pillaiyo Pillai (1972)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Pillaiyo-Pillai-1972/article14479813.ece. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2016.