பில்ஹணா

பில்ஹணா அல்லது கவியின் காதல் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பி. என். ராவ் இயக்கினார். இப்படமானது இதே பெயரிலான காசுமீரக் கவிஞரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஏ. ஆர். சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

பில்ஹணா
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புமுபாரக் பிக்சர்சு, சென்னை
வசனம்எஸ். சுந்தராச்சாரி
நடிப்புகே. ஆர். ராமசாமி
ஏ. ஆர். சகுந்தலா
ஆர். பாலசரஸ்வதி
புளிமூட்டை ராமசாமி
கே. எஸ். அங்கமுத்து
எம். ஜெயசிறீ
பாடலாசிரியர்பாபநாசம் சிவன்
கலையகம்ப்ரகதி பிக்சர்சு
வெளியீடுசெப்டம்பர் 1948
நீளம்15605 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முபாரக் பிக்சர்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசனங்களை எஸ். சுந்தராச்சாரியாரும், பாடல்களை பாபநாசம் சிவனும் எழுதியிருந்தனர். இப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன் நாராயணன் நாயர் என்ற பி. என். ராவ். இவர் ரம்பையின் காதல், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், மதனகாமராஜன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.[2]

கதை

மன்னன் தன் மகள் யாமினிக்கு கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியரைத் தேடுகிறான். இறுதியில் கவிஞர் பில்ஹானனை ஆசிரியராக நியமிக்கிறான். இருவருக்கும் இடையே காதல் எதுவும் ஏற்படாமல் தடுக்க, அரசன் யாமினியிடம் பில்ஹணன் ஒரு பார்வையற்றவர் என்றும், பில்ஹணனிடம் யாமினி அழகில்லாதவள் என்றும் கூறுகிறான். ஒருவரையொருவர் பார்க்க இயலாதபடி இருவருக்குமிடையில் திரை ஒன்றைத் தொங்கவிடுகிறான். ஒரு நாள் இரவு, முழு நிலவைக் கண்டு மகிழ்ந்த பில்ஹணன், நிலவை வருணித்து ஒரு கவிதையைப் பாடுகிறான். பார்வையற்ற ஒருவரால் எப்படி இவ்வளவு அழகாக நிலவைப் பற்றிப் பாடமுடியும் என்று யோசித்த யாமினி, திரைச்சீலையை விலக்குகிறாள். பில்ஹணனின் அழகில் மயங்குகிறாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். மன்னன் அவர்களின் காதலை எதிர்க்கிறான், பில்ஹணனும் யாமினியும் அரசனின் பேச்சைக் கேட்க மறுக்கின்றனர். இதனால் ​​அரசன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கிறான். மன்னனின் நண்பர்களும் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் உண்மையான அன்பின் ஆற்றலைப் புரிந்துகொண்ட, அரசன் பில்ஹணனையும் யாமினியையும் மன்னித்து அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறான்.[3]

தயாரிப்பு

1944 ஆம் ஆண்டில், மாடர்ன் தியேட்டர்சின் டி. ஆர். சுந்தரம், காசுமீரக் கவிஞர் பில்ஹானனின் கதையைத் தழுவி எம். கே. தியாகராஜ பாகவதர் நடிக்கும் திரைப்படத்தை இயக்க விரும்பினார். இருப்பினும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சந்தேக நபராக தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டதால் படம் கிடப்பில் போடப்பட்டது.[4] பின்னர், டி.கே.எஸ் சகோதரர்கள் பில்ஹணனின் கதையின் இரண்டு தழுவல்களை உருவாக்கினர். முதல் நிகழ்வானது மேடை நாடகத்துக்காகவும், இரண்டாவது நிகழ்வு பில்ஹணன் என்ற பெயரில் 1948 ஏப்ரலில் வெளியான திரைப்படத்துக்காகவும் உருவாக்கபட்டது. கதைக்கு காப்புரிமை இல்லாததால், முபாரக் பிக்சர்சு பில்ஹாணா என்ற பெயரில் தங்கள் சொந்த படத்ததை உருவாக்க முடிவு செய்தனர். இந்தப் பதிப்பை பி. என். ராவ் இயக்கி, எஸ். சுந்தராச்சாரியார் திரைக்கதை எழுத, பாபநாசம் சிவன் இசையமைத்தார். இப்படத்தில் கே. ஆர். ராமசாமி முதன்மைப் பாத்திரத்திரமான பில்ஹாணன் பாத்திரத்திலும், ஏ. ஆர். சகுந்தலா யாமினி பாத்திரத்திலும் நடித்திருந்தனர். துணை வேடங்களில் ஜி. சகுந்தலா, எஸ். எம். சைகப்பா, ஆர். பாலசரஸ்வதி தேவி, புலிமூட்டை ராமசாமி, எம். ஜெயஸ்ரீ, எம். ஜெயா, அங்கமுத்து களிமண்ணு ஆகியோர் நடித்தனர்.[5]

பாடல்கள்

  • என் சசிகலா என்ற பாடலை கே. ஆர். ராமசாமி கொலைக்களத்தில் பாடியிருக்கிறார்.[6]

வெளியீடும் வரவேற்பும்

பில்ஹாணா 1 நவம்பர் 1948 இல் வெளியானது.[7] திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இது எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை, ஏனெனில் டிகேஎஸ் சகோதரர்கள் எடுத்த முந்தைய படம் "திரைப்பட பார்வையாளர்களின் மனதில் இன்னும் பசுமையாக இருந்தது". இருப்பினும், முபாரக் பிக்சர்ஸின் பதிப்பு "சுவாரஸ்யமான கதைக்களம், ராமசாமியின் பாடல், பி. என். ராவின் திறமையான இயக்கத்திற்காக" நினைவில் இருக்கும் என்று அவர் கூறினார்.[5]

மேற்கோள்கள்

  1. "1948 வருசத்தைய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 29. சனவரி 1949. 
  2. 2.0 2.1 ராண்டார் கை (29 சூன் 2013). "Bilhana (1948)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016. 
  3. Randor Guy (16 February 2013). "BLAST FROM THE PAST: Bilhanan 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005072313/http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. 
  4. Randor Guy (16 February 2013). "BLAST FROM THE PAST: Bilhanan 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005072313/http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. 
  5. 5.0 5.1 Randor Guy (29 June 2013). "BLAST FROM THE PAST: Bilhana (1948)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005051737/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece. 
  6. "ஸ்டூடியோக்களைச் சுற்றி". பேசும் படம்: பக். 63. சூன் 1948. 
  7. Film News Anandan (2004) (in Tamil). Saadhanaigal Padaitha thamizh thiraipada varalaru. Sivagami Publications. http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails23.asp. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பில்ஹணா&oldid=35622" இருந்து மீள்விக்கப்பட்டது