பிறப்பு (திரைப்படம்)
பிறப்பு 2007 இல் வெளிவந்த முக்கோண காதல் தமிழ்த் திரைப்படமாகும். இதனை எல். வி. இளங்கோவன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில், சங்கி மகேந்திரா ஒளிப்பதிவில் இப்படம் எடுக்கப்பட்டது.
அனல் அரசு என்பவர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார். இத்திரைப்படத்தில் பிரபா, கார்த்திகா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன் போன்றோர் நடித்துள்ளனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ https://www.filmibeat.com/tamil/movies/pirappu/cast-crew.html பிலிமிபீட் - பிறப்பு திரைப்பட விமர்சனம்