பிரேந்திர நாத் தத்தா
பிரேந்திர நாத் தத்தா (1 மார்ச்சு 1935 – 23 அக்டோபர் 2023) அசாமைச் சேர்ந்த ஒரு இந்திய கல்வியலாளர், மொழியியலாளர், நாட்டுப்புற ஆய்வாளர் , பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். தத்தா அசாமில் உள்ள பல கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.[1][2] மேலும், இவர் பல ஆய்வு நூல்களையும் படைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு இந்திய குடிமக்களின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த இவரின் பணிக்காக வழங்கப்பட்டது.[3] 2010ஆம் ஆண்டு ஜெகதாத்ரி ஹர்மோகன் தாஸ் இலக்கிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், வடக்கு இலக்கிம்பூர் அமர்வு, 2003 மற்றும் ஹோஜாய் அமர்வு, 2004 ஆகியவற்றுக்கான அசாம் சாகித்திய அகாதமியின் தலைவராக தத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தத்தாவும் அவரது மனைவியும் | |
பிறப்பு | நகோன், அசாம் மாகாணம், இந்தியா | 1 மார்ச்சு 1935
---|---|
இறப்பு | 23 அக்டோபர் 2023 குவகாத்தி, அசாம், இந்தியா | (அகவை 88)
பிரதான விருப்பு | நாட்டார் வழக்காற்றியல் |
Major works | வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார வரையறைகள் |
ஆரம்பகால வாழ்க்கை
தத்தா அசாமில் உள்ள நாகோன் என்னும் ஊரில் 1935ம் ஆண்டு மார்ச்சு 1ல் பிறந்தார். கல்பனாத் தத்தா மந்தாகினி தத்தா ஆகியோர் இவரது பெற்றோர். இவர் தனது பள்ளிக்கல்வியை கவுகாத்தியில் உள்ள சென்னிகுத்தி எல்.பி. பள்ளியிலும் பின்னர் கோல்பாராவில் உள்ள பள்ளியிலும் பயின்றார். 1933 ம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்விலும் அசாம் பல்கலைக்கழக தேர்விலும் முதல் 10 இடங்களுக்குள் பெற்றார். பின்னர், சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதியில் பொருளாதாரத் துறையில் தனது இளங்கலை கல்வியையும் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியையும் பயின்றார். [1]
பணிகள்
1957ஆம் ஆண்டு பி. போரூவா கல்லூரியில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியைத் துவக்கினார். 1964-ல் அசாமில் கௌரிபூரில் உள்ள பிரமதேஷ் பருவா கல்லூரியின் முதல்வராக பணியி்ல் சேர்ந்தார். மேலும், கோல்பாரா கல்லூரி மற்றும் பாண்டு கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் இவர் முதல்வராக பணியாற்றியுள்ளார்.[1] 1974ஆம் ஆண்டு, பிரபுல்லா தத்தா என்பவரின் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் பெற்றார்.[1] 1979ஆம் ஆண்டு கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பின்னர் நாட்டுப்புறவியல் ஆராய்ச்சித் துறையின் தலைவரானார். 1995ஆம் ஆண்டு கவுகாத்தி பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின்னர் தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய கலாச்சார மற்றும் கலை வடிவங்கள் துறையில் பேராசிரியராக சேர்ந்தார்.[1]
இலக்கியப் பணி
தத்தா பல்வேறு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நூல்களுள் ஒன்றான வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார வரையறைகள் (Cultural Contours of Northeast India) ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது.[2] சங்கர் மாதவர் மனிஷா அரு அசோமர் சமஸ்கிருத உத்தராதிகர் என்ற புத்தகத்திற்காக, இவர் 12வது ஜகதாத்ரி-ஹர்மோகன் தாஸ் இலக்கிய விருதை வென்றார்.[4]
இசைப்பணி
தத்தா ஒரு பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் இருந்தார். [5] அவர் எழுதிய பாடல்கள்: "மோனோர் கோபர்", "பஹுதின் போகுலோர் கோந்த் போ நாய்", "மெலி திலோ மான்", "ரோஹிமாலா உரோனிர் மாஜெரே", "சௌ சிரிஷ் தாலத்", "தோமர் காரணே ஜாவ்", "ஆஹினக் கோனே ஆனானே", " மௌ தாபோனார்", "சீதா பனாபாஷ்", "போகோலி போகா ஃபோட் டி ஜா", "ஜிலிர் மாதே", "ஓ கன் சிரிகா", "பராஷா தோமார்", "ஆகாஷே போதாஹே", "ஆகாஷ் ஆமாக் அகானி ஆகாஷ் தியா" போன்றவை ஆகும். ப்ரோஜென் பருவா இயக்கிய சுமிருதிர் பரஷ் என்ற அசாமி மொழித் திரைப்படத்திற்காகவும் அவர் பாடல் பாடியுள்ளார். [5]
விருதுகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Music Not Solely For Entertainment" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304025834/http://www.bipuljyoti.in/music/birendranath_interview.html.
- ↑ 2.0 2.1 "Cultural Contours of North-East India". Oxford University Press இம் மூலத்தில் இருந்து 12 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120312232828/http://www.us.oup.com/us/catalog/general/subject/Anthropology/Folklore/?view=usa.
- ↑ 3.0 3.1 "Padma awards 2009" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304082109/http://www.culturopedia.in/Awards/padma-awards2.html.
- ↑ "Dr Birendra Nath Datta conferred literary award". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303222854/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb2110%2Fcity05.
- ↑ 5.0 5.1 "Birendranath Datta". srimanta.net இம் மூலத்தில் இருந்து 29 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929163743/http://www.srimanta.net/contents_l3.php?q=5&ID=27&ID3=38&link_caption=Birendranath%20Datta.
- ↑ "Padma Awards Directory (1954–2009)". Ministry of Home Affairs இம் மூலத்தில் இருந்து 2013-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf.