பிரமனார்

பிரமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 357. பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்தது.

பாடல் சொல்லும் செய்தி

மூவருலகம் என்று போற்றப்படும் தமிழகம் சேர சோழ மற்றும் பாண்டியர் என்னும் மூவருக்கும் பொது என்று விட்டுக்கொடுத்து ஆண்டவர்களும், பொது அன்று, தனக்கே உரிமை என்று மற்றவர்களை வென்று ஆண்டவர்களும் எத்தனை ஆண்டுகள் ஆண்டனர்!

இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வோர் புணையில் செல்வர். புணையைக் கைவிட்டவர் அக்கரைக்குச் செல்ல முடியாது.

அதுபோல, வாழ்க்கை நீச்சலுக்கு மற்றவர்கள் புணையாக அமைகின்றனர். இதை உணர்ந்துகொண்டு வாழுங்கள்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பிரமனார்&oldid=11954" இருந்து மீள்விக்கப்பட்டது