பியூசு மானுசு

பியூசு மானுசு (Piyush Manush) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆவார். 2010இல் ஒத்த கருத்துடைய சிலருடன் இணைந்து சேலம் குடிமக்கள் மன்றம் (Salem Citizen’s Forum) என்ற நகரியக் குடிகளின் கூட்டமைப்பை உருவாக்கி மக்கள்நலப் பணிகளில் ஈடுபட்டார்.[1] சேர்வராயன் மலையடிவாரத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மூக்கனேரியை எடுத்துக்கொண்டு அதனை பெரும் கழிவுகளிலிருந்து காப்பாற்றினார்.[2][3] தவிரவும் அம்மாப்பேட்டை ஏரி, குண்டக்கல் ஏரி, இசுமாயில்கான் ஏரி, அரிசிபாளையம் குளம், பள்ளப்பட்டி கிணறு ஆகியவற்றை மீட்டெடுத்தார்.[4] கஞ்சமலைப் பகுதியில் வணிகநோக்க சுரங்கங்களை எதிர்த்தார். நில கைப்பற்றுகையாளர்களையும் நிலக் குற்றமிழைக் குழுக்களையும் எதிர்த்து போராடி வந்தார். தர்மபுரியின் மலைப்பகுதிகளில் உள்ள காடுகளைப் பாதுகாக்க ‘கூட்டுறவு காடு’ என்ற திட்டத்தை துவக்கினார்.[5] 2015ஆம் ஆண்டு சென்னை மக்களுக்கு சிஎன்என்-ஐபிஎன் ஆண்டின் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டபோது சென்னை மக்களின் சார்பாளர்களாக பெற்றுக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்.[6]

பியூசு மானுசு
பிறப்புபியூஷ் சேத்தியா
தேசியம்இந்தியர்
பணிவிவசாயம்
அமைப்பு(கள்)கூட்டுறவு காடு, சேலம் குடிமக்கள் மன்றம்
அறியப்படுவதுநீர்ப் பாதுகாப்பு
சொந்த ஊர்சேலம்

கைது

சூலை 2016இல் இவரும் இரு செயற்பாட்டாளர்களும் சேலத்தில் மூள்ளுவாடி பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டனர். இவரது பிணை குற்றவியல் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காவல்துறையின் செய்கையை கண்டித்தனர். இவரை விடுவிக்கக் கோரி சமுக வலைத்தளங்களில் போராட்டம் வலுத்தது.[7]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பியூசு_மானுசு&oldid=27753" இருந்து மீள்விக்கப்பட்டது