பினு சதானந்தன்

பினு சதானந்தன் (Binu Sadanandan) (பிறப்பு 23 சூலை) ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், மலையாளத் திரையுலகில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.[1]

பினு சதானந்தன்
பிறப்பு1 சூன் 1980 (1980-06-01) (அகவை 44)
காலடி, இடவூர், எர்ணாகுளம், கேரளா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சிறீ சங்கரா கல்லூரி
காலடி, எர்ணாகுளம்
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கீது பினு
பிள்ளைகள்2

பினு 2014 ஆம் ஆண்டு இதிகாசா என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஸ்டைல் (2016 படம்) (2016) என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார்.[2] இராஜேசு அகஸ்டின் தயாரித்த இதிஹாசா வெளியான பிறகு பினு பிரபலமடைந்தார்.

தொழில்

இவர், புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதற்கிடையில், இதிகாசாவின் ஒரு வரி கதையை உருவாக்கினார். இது இவரது முதல் இயக்கமாக மாறியது. படம் 2014இல் வெளியிடப்பட்டது. இந்தப் படம் திரையரங்கில் நல்ல வசூலைக் கொண்டிருந்தது.[3]

இவரது அடுத்த படம் ஸ்டைல் 2016இல் வந்தது. இதுவும் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றது. தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலதிகமான ஆனாலும், ஒரு இயக்குநராக இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.[4]

சொந்த வாழ்க்கை

இவர், கே.சதானந்தன், இராதாமணி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை எர்ணாகுளத்தில் உள்ள காலடியில் கழித்தார். காலடியின் சிறீ சங்கரா கல்லூரியில் இந்தியில் இளங்கலை பட்டம் பெற்றார்.[5] இவருக்கு கீது என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பினு_சதானந்தன்&oldid=23658" இருந்து மீள்விக்கப்பட்டது