பிண்டம்

பிண்டம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும்

  1. சூத்திரம்,
  2. ஓத்து,
  3. படலம்,
  4. பிண்டம்

என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. [1] பிண்டத்தை விளக்கும்போது சூத்திரம், ஓத்து, படலம் ஆகிய மூன்று உறுப்புகளும் அடங்கியது பிண்டம் என்று அது குறிப்பிடுகிறது. [2]

உணவுப் பிண்டம்

  • வெட்சிப் போருக்குப் புறப்படும்போது அரசன் படைவீரர்களுக்கு அளிக்கும் விருந்துணவைத் தொல்காப்பியம் பிண்டம் எனக் குறிப்பிடுகிறது. [3]

அடிக்குறிப்புகள்

  1. 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
    இன மொழி கிளந்த ஓத்தினானும்,
    பொது மொழி கிளந்த படலத்தானும்,
    மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
    ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
  2. 'மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்,'
    தோன்று மொழிப் புலவர், 'அது பிண்டம்' என்ப (தொல்காப்பியம் 474)
  3. பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் (தொல்காப்பியம் 3-65)
"https://tamilar.wiki/index.php?title=பிண்டம்&oldid=20585" இருந்து மீள்விக்கப்பட்டது