பா. ரா. சுப்பிரமணியன்

பா. ரா. சுப்பிரமணியன் (பிறப்பு: டிசம்பர் 20, 1941) தமிழக எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம் எனும் ஊரில் பிறந்த இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் அவர்களின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றார். நாட்டுப்புறப் பாடல்களில் ஆய்வு செய்தவர். அமைப்பியல் கோட்பாட்டைத் தம் ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

செருமனி கோலோன் பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகள் இந்தியவியல் துறையில் தமிழ் விரிவுரையாளராகவும், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறையில் பதிப்பாசிரியராவும் பணியாற்றியுள்ளார். மொழி அறக்கட்டளையில் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர் எழுதிய சொல்வலை வேட்டுவன் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இவரது பங்களிப்புகள் வருமாறு:

கட்டுரைத் தொகுப்பு

  • சொல்வலை வேட்டுவன் 2009.

முதன்மைப் பதிப்பாசிரியர்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பா._ரா._சுப்பிரமணியன்&oldid=26082" இருந்து மீள்விக்கப்பட்டது