பா. சத்தியசீலன்

பா. சத்தியசீலன் (15 சூன் 1938 – 30 சூன் 2001) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், மெல்லிசைப் பாடகரும் ஆவார்.[1] இலங்கை அரசின் சாகித்ய மண்டலப் பரிசு பெற்றவர். இவரது இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்கான பாடல்களை பெருமளவில் எழுதியுள்ளார். "பாவலவன்" என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

சத்தியசீலன் யாழ்ப்பாண மாவட்டம், அல்லைப்பிட்டியில் பாவிலுப்பிள்ளை, விக்டோரியா ஆகியோருக்குப் பிறந்தார். கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படித்து ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கவிஞர், பண்டிதர் ஆகிய சிறப்புப் படங்களைப் பெற்றார். கொழும்புத் தமிழ்ச் சங்கம் இவருக்கு "பாவலவன்" என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கியது. 1970 இல் இவர் நவாலியில் கலாதேவி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.[2]

சிறுவர்களுக்கான கவிதை இலக்கியங்களை ஆக்குவதில் சிறந்து விளங்கினார். இலங்கை வானொலியிலும், கவியரங்குகளிலும் இவர் கலந்து கொண்டு கவிதைகளைப் படைத்திருக்கிறார்.[2]

எழுதிய நூல்கள்

  • தமிழ்ப் பரிசு (1967)
  • பா (கவிதைகள் தொகுப்பு, 1968)
  • பாட்டுக் கூத்து (1976)
  • மழலைத் தமிழ் அமிழ்தம் (ரமணியின் ஓவியங்களுடன், 1978)
  • சந்தனப் பொட்டுச் சுந்தரம்பிள்ளை (1979)
  • தலை காத்த தலைமயிர் (1985)
  • கப்பல் (1985)
  • பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா (189)
  • பாட்டு விளையாட்டு (1989)
  • அல்லைப்பிட்டியம்பதி அருளப்பர் அம்மானை (கிறித்தவ இலக்கியம், 1989)
  • உலகினார்க்கு ஓர் உடன்பிறப்பு: சார்ள்ஸ் டிஃபுக்கோ (கிறித்தவ இலக்கியம், 1990)
  • பைபிள் கதைகள் (1991)
  • பாட்டு (சிறுவர் பாடல்கள், 1991)
  • உயிர் காத்த ஓவியம் (1991)

மேற்கோள்கள்

[நூலகம்]

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=பா._சத்தியசீலன்&oldid=2755" இருந்து மீள்விக்கப்பட்டது