பால. இரமணி
பால. இரமணி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழ மூங்கிலடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றி அதன் பின்னர் நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனில் பணியாற்றினார். தற்போது சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கம்ப இராமாயணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். 28 நூல்களையும் எழுதியுள்ளார்.
பால. இரமணி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பால. இரமணி |
---|---|
அறியப்படுவது | எழுத்தாளர் |
விருது
- தமிழ்நாடு அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான கம்பர் விருது பெற்றிருக்கிறார். [1]
மேற்கோள்கள்
- ↑ தமிழறிஞர்கள் 4 பேருக்கு அரசு விருதுகள்[தொடர்பிழந்த இணைப்பு] (தினமணி செய்தி)