பால் பேட்டி
பால் பேட்டி (Paul Beatty பிறப்பு 1962) என்பவர் புக்கர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். தி செல் அவுட் என்ற ஆங்கில புதினத்திற்காக 2016 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] அமெரிக்க நாட்டில் நிலவும் இன வேறுபாடுகள், தொழிலாளர்கள் இடையில் உள்ள அடிமைத்தனம் ஆகியன தொடர்பான போராட்டங்களை கிண்டல் கேலியுடன் விவரிக்கிறது இந்தப் புதினம்.
லாசு ஏஞ்சல்சில் பிறந்து, நியூயார்க்கில் வாழ்ந்து வரும் பால் பேட்டி மேலும் 3 புதினங்களை எழுதியுள்ளார். இரண்டு கவிதை நூல்களையும், ஆப்பிரிக்க அமெரிக்க நகைச்சுவைகளின் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
பிற புதினங்கள்
- சிலம்பர்லாந்த்
- டர்ப்
- தி ஒயிட் பாய் சப்புள்