பால் தத்தாத்ரேய திலக்

பால் தத்தாத்ரேய திலக் ((Bal Dattatreya Tilak) ஓர் இந்திய இராசயனப் பொறியாளராவார். தேசிய இரசாயன ஆய்வகத்தின் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.[1][2] இந்திய அரசாங்கம் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்மபூசண் விருதை 1972 ஆம் ஆண்டு பால் தத்தாத்ரேய திலக்கிற்கு வழங்கி சிறப்பித்துள்ளது.[3]

பால் தத்தாத்ரேய திலக்
Bal Dattatreya Tilak
பிறப்பு26 செப்டம்பர் 1918
கரஞ்சா, வார்தா
இறப்பு25 மே 1999(1999-05-25) (அகவை 80)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுதேசிய வேதியியல் ஆய்வகம்

வாழ்க்கைக் குறிப்பு

பால் தத்தாத்ரேய திலக் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள கரஞ்சா நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தத்தாத்ரேய தாமோதர் திலக் ஒரு துகில் பொறியாளராவார். புனேவிலுள்ள சர் பரசுராம்பாவு கல்லூரியில் பால் படித்தார். மும்பையிலுள்ள இராயல் அறிவியல் நிறுவனத்தில் துகில் வேதியியல் துறையில் 1939 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1943 ஆம் ஆண்டில் துகில் வேதியியல் பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பால் தனது வாழ்க்கையில் பல சிறந்த விஞ்ஞானிகளுடன் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டில் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற உட்வார்ட்டுடன் பணிபுரிந்தது ஓர் எடுத்துக்காட்டாகும்.

சாயங்கள், பல்லினவளையச் சேர்மங்கள் மற்றும் சீடிராய்டுகள் எனப்படும் ஊக்கமருந்துகளின் வேதியியலை இவர் கற்பித்தார். இதே பாடப்பொருளுக்கான ஆராய்ச்சிகளை வழிநடத்தினார். இந்திய மற்றும் பன்னாட்டு அறிவியல் பத்திரிகைகளில் இருநூறுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்களை வெளியிட்டார். 95 மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்த திலக் தனது 81 வயதில் இதயநோய் காரணமாக 1999 ஆம் ஆண்டு மே மாதம் 25 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பால்_தத்தாத்ரேய_திலக்&oldid=25552" இருந்து மீள்விக்கப்பட்டது