பால்சந்திர முங்கேகர்
பால்சந்திர லக்ஷ்மன் முங்கேகர் (Bhalchandra Laxman Mungekar) (பிறப்பு: மார்ச் 2,1946) ஒரு இந்தியப் பொருளாதார நிபுணர், கல்வியாளர், சமூக சேவகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவர் வேளாண் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் பி. ஆர். அம்பேத்கர் குறித்த நிபுணர் ஆவார்.[2]
பால்சந்திர முங்கேகர் | |
---|---|
மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் 22 மார்ச்சு 2010 முதல் 21 மார்ச்சு 2016 வரை | |
முன்னவர் | தாரா சிங், பாரதிய ஜனதா கட்சி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 2 மார்ச்சு 1946 தியோகட், சிந்துதுர்க் மாவட்டம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | லீனா பாலச்சந்திர முகேங்கர்[1] |
பிள்ளைகள் | 3 |
தொடக்க கால வாழ்க்கை.
மகாராட்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள முங்கே கிராமத்தில் லக்ஷ்மன் கோபால் முங்கேகர் மற்றும் செவந்தி முங்கேகர் ஆகியோருக்கு முங்கேகர் பிறந்தார்.[1] பரேலில் உள்ள நவபாரத் வித்யாலயா மற்றும் வடாலாவில் உள்ள சித்தார்த் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், மும்பைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 1965 ஆம் ஆண்டில், அவர் இந்திய ரிசர்வ் வங்கி எழுத்தராக சேர்ந்து உதவி பொருளாதார நிபுணர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[3]
தொழில் வாழ்க்கை
மும்பைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய வேளாண் விலை ஆணையத்தின் திட்டக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். முங்கேகர் சிம்லாவில் உள்ள இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும், சிறந்த தத்துவஞானியும் ஆவார். இவர் சித்தார்த் கலை, அறிவியல் மற்றும் வர்த்தக கல்லூரி பொருளாதார ஆசிரியராகவும் இருந்தார்.[4][5]
தனிப்பட்ட வாழ்க்கை
அவர் அம்பேத்காரிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Rajyashabha Bio
- ↑ "President appoints 5 new members to Rajya Sabha". ரெடிப்.காம். 19 March 2010. http://news.rediff.com/report/2010/mar/19/president-appoints-5-new-members-to-rajya-sabha.htm. பார்த்த நாள்: 19 August 2013.
- ↑ "Bal Mungekar's remarkable journey". https://www.rediff.com/news/2004/sep/14spec1.htm.
- ↑ "Detailed Profile - Dr. Bhalchandra Mungekar - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". https://archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2135.
- ↑ "About". Siddharth College of Arts, Science and Commerce இம் மூலத்தில் இருந்து 6 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221206153309/https://siddharthcollegeofasc.com/about-college/.