பாலைக்குளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாலைக்குளி என்பது இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார், புத்தளம் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமாகும். இதன் வடக்கே கொண்டச்சியும் கிழக்கே வியாயடி குளமும், வில்பத்து சரணாலயமும் அமைந்துள்ளன. தெற்கே மறிச்சிக்கட்டியும், ஊர்கமமும் அமைந்துள்ளன. அதன் மேற்கே மன்னார் – புத்தளம் வீதியும் உள்ளது.
இது 400 குடும்பங்களைக் கொண்ட கிராமம். இம்மக்கள் தமது வருமானத்தை விவசாயம், கால்நடை வளர்ப்பு, வியாபாரம் மூலம் பெறுகின்றனர். இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது.
2010ம் ஆண்டு நடைபெற்ற முசலி பிரதேசசபைத் தேர்தலில் இக்கிராமத்தைச் சேர்ந்த எம். எச். எம். காமில் நான்காம் இடத்தைப் பெற்று சபை உறுப்புரிமை பெற்றார்.