பாலராஜூ கதா
பலராஜூ கதா ( பாலராஜூவின் கதை ) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழி திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தினை முல்லபுடி வெங்கட ரமணா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படமானது நந்தி விருதினை வென்றுள்ளது.
பாலராஜூ கதா | |
---|---|
இயக்கம் | பாபு |
தயாரிப்பு | வசிராஜு பிரகசம் நிதமர்த்தி பத்மாட்சி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | மாஸ்டர் பிரபாகர் நாகபூசணம் அல்லு ராமலிங்கம் ஹேமலதா துலிபாலா சூர்யகாந்தம் |
ஒளிப்பதிவு | பி. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | கோட்டகிரி கோபால் ராவ் |
வெளியீடு | 1970 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
இந்தத் திரைப்படத்தினை 1969 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமாக மறுஆக்கம் செய்து வா ராஜா வா என்ற பெயரில் வெளிவந்தது.
கதை
இது ஒரு வரலாற்று நகரமான மகாபலிபுரத்தில் பாலராஜு (மாஸ்டர் பிரபாகர்) என்ற சிறுவனின் கதை. அவன் தனது குடும்பத்தை ஆதரிக்க சுற்றுலா வழிகாட்டியாக மாறுகிறான். வயதான குழந்தை இல்லாத தம்பதியினர் அவரை விரும்பி அவரை தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஒரு நாள் சிற்பி ஒருவர் செதுக்கிய கட்டளைகளை படிக்கிறான் சிறுவன். பின்பு அவனுடைய வாழ்விலும் அந்த கட்டளைகள் நடைபெறுவதை எண்ணி மகிழ்கிறான்.
நடிகர்கள்
- பாலராஜுவாக மாஸ்டர் பிரபாகர் [1]
- நாகபுஷனம்
- சூர்யகாந்தம்
- துலிபாலா
- மிக்கிலினேனி
- அல்லு ராமலிங்கையா
- குழந்தை சுமதி
- சாட்சி ரங்க ராவ்
- ஹேமலதா
- ரவி கொண்டல ராவ்
- புஷ்பா குமாரி
ஒலிப்பதிவு
- "ஆதிகனானி அனுகோவாடு செப்பகுந்தா தேதியோடு" -
- "செப்பு செப்பு பாய் ஜரிகேடி விப்பி செப்பு" -
- "சாது சாது தமாஷா பாலே தமாஷா ஐது வெல்ல தமாஷா" -
- "ஹிப்பி ஹிப்பி ஆடபில்லலோ வீலு செப்பராணி கோப்பா கோப்பா தாராஜுவாலோ" -
- "மகாபலிபுரம். . . பாரதீய கலாஜகதிகிடி கோப்பா கோபுரம் "-
- "ஒகாட்டி ரெண்டு மூடைட் முது அந்தகு மிஞ்சினா சந்தனமைட் வாடு" -
விருதுகள்
- 1971 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான (வெண்கலம்) நந்தி விருது
மேற்கோள்கள்
- ↑ Ashok Kumar, S. R. (2010-10-30). "Grill Mill – Master Prabhakar". The Hindu. https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-ndash-Master-Prabhakar/article15798228.ece.