பாலயோகினி
பாலயோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, பேபி சரோஜா , கே. ஆர். செல்லம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகக் கருதப்படுகிறது.[1][2][3][4][5]
பாலயோகினி | |
---|---|
பாலயோகினி திரைப்படத்தில் பேபி சரோஜாவும், கே. ஆர். செல்லமும் தோன்றும் காட்சி | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
கதை | திரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம் |
இசை | மோதி பாபு |
நடிப்பு | சி. வி. வி. பந்துலு கே. பி. வத்சல் சேலம் சுந்தரம் பேபி சரோஜா ஆர். பாலசரஸ்வதி செல்லம் ருக்குமணி கே. ஆர். செல்லம் |
வெளியீடு | பெப்ரவரி 5, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிறு தகவல்கள்
பாலயோகினியைத் தயாரித்த கே. சுப்பிரமணியம் நூறு ரூபாய் பரிசை அறிவித்து, பொது மக்களிடம் இருந்து தம் கதைக்குத் தகுந்த முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.[6]
பாடல்கள்
இப்படத்திற்கு மோதி பாபு இசை அமைத்தார். பாடல் வரிகளை பாபநாசம் சிவன் எழுதினார். பேபி சரோஜா தனது பொம்மைக்கு தாலாட்டு பாடிய ‘கன்னி பாப்பா, கனிமுத்து பாப்பா’ பாடல் பிரபலமானது.
- ராதே தோழி
- க்ஷமாப்பனா ஓ மாமா க்ஷமாப்பனா
- கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கி தருவேன்
மேற்கோள்கள்
- ↑ "Blast From the Past - Balayogini 1937, The Hindu 10 April 2009" இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090611115530/http://www.hindu.com/cp/2009/04/10/stories/2009041050371600.htm.
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. பக். 15. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ.
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (1981). The message bearers: the nationalist politics and the entertainment media in South India, 1880-1945. Chennai: Cre-A. பக். 116. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ.
- ↑ Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. பக். 37. ISBN 0-333-93410-5, ISBN 978-0-333-93410-4. https://books.google.com/books?id=-OpkAAAAMAAJ.
- ↑ Velayutham, Selvaraj (2008). Tamil cinema: the cultural politics of India's other film industry (Hardback ). New York: Routledge. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-39680-6.
- ↑ "இது நிஜமா?". குண்டூசி: பக். 59. ஆகத்து 1951.