பார்வதி என்னை பாரடி
பார்வதி என்னை பாரடி (Parvathi Ennai Paradi) வி. சேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். சரவணன், புதுமுகம் ஸ்ரீபார்வதி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், சார்லி, வாசுவிக்ரம், காஜா ஷெரிப், லலிதாகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். கே. ஆர். கங்காதரன் தயாரிப்பில், இளையராஜா இசை அமைத்து 23 ஜூலை 1993 ஆம் தேதி இப்படம் வெளியானது.[1][2][3][4]
பார்வதி என்னை பாரடி | |
---|---|
இயக்கம் | வி.சேகர் |
தயாரிப்பு | கே.ஆர்.ஜி |
கதை | வி.சேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரவணன் ஸ்ரீபார்வதி ஸ்ரீவித்யா ஜனகராஜ் விஜயகுமார் சார்லி வாசுவிக்ரம் காஜா ஷெரிப் லலிதாகுமாரி |
படத்தொகுப்பு | ஏ.பி.மணிவண்ணன் |
வெளியீடு | சூலை 23, 1993 |
வகை
நடிகர்கள்
- சரவணன்
- புதுமுகம் ஸ்ரீபார்வதி
- விஜயகுமார்
- ஸ்ரீவித்யா
- ஜனகராஜ்
- சார்லி
- வாசுவிக்ரம்
- காஜா ஷெரிப்
- லலிதாகுமாரி
- கோவை பாபு
- எல்.ஐ.சி. நரசிம்மன்
- இடிச்சபுளி செல்வராஜ்
- பசி நாராயணன்
- தங்கராஜ்
- சிங்கமுத்து
கதைச்சுருக்கம்
செல்வந்தரான ராஜதுரை (விஜயகுமார்), ஊரில் மிகவும் மதிக்கத்தக்க நபராவார். அவரின் குறும்புக்கார மகள் பார்வதி (ஸ்ரீபார்வதி) . ராஜதுரையின் ஊரில் உள்ள கல்லூரிக்கு தமிழ் ஆசிரியராக வருகிறார் வெங்கடராமன் (ஜனகராஜ்). வேங்கடராமனிடம் தனிப்பாடம் பயில்கிறாள் பார்வதி. வேங்கடராமனின் மனைவி காயத்ரி (ஸ்ரீவித்யா) மற்றும் மகன் சிவா (சரவணன்).
அநீதியை தாங்க முடியாத, முன் கோபம் கொண்டவன் சரவணன். கல்லூரியில் படிக்கும் பொழுது, மந்திரியின் மகனை சரவணன் அடித்ததால், அவன் கல்லூரியில் இருந்து விலக்கப்பட்டான். பின்னர், செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை செய்கிறான் சரவணன். அந்த நிறுவனத்தின் முதலாளியுடன் மோதல் ஏற்பட்டு, சரவணனுக்கு சிறை செல்ல நேரிடுகிறது
மீண்டும் ஊர் திரும்பும் சிவா, தன் பெற்றோரிடம் செல்கிறான். முதலில் பார்வதியுடன் மோதல் ஏற்பட்டு. பின்னர் அதுவே காதலாக மாறுகிறது. ராஜதுரையின் உருவினார் ரமேஷ் (வாசு விக்ரம்) பார்வதியை திருமணம் செய்ய விரும்புகிறான். இறுதியில் பார்வதியை யார் மணந்தார் எனபதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. வாலி, கங்கை அமரன், பிறைசூடன் எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்தார்.[5][6]
வரவேற்பு
இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.[7]
மேற்கோள்கள்
- ↑ "Paarvathi Ennai Paaradi (1993) Movie Details". http://spicyonion.com/movie/paarvathi-ennai-paaradi/.
- ↑ "www.gomolo.com" இம் மூலத்தில் இருந்து 2018-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180716095133/http://www.gomolo.com/parvathi-ennai-paradi-movie/11751.
- ↑ "www.cinesouth.com" இம் மூலத்தில் இருந்து 2004-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041115235610/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1762.
- ↑ "jointscene.com" இம் மூலத்தில் இருந்து 2010-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100204102449/http://jointscene.com/movies/Kollywood/Parvathy_Ennai_Paradi/8988.
- ↑ "play.raaga.com". http://play.raaga.com/tamil/album/Paarvathi-Ennai-Paaradi-songs-T0002858.
- ↑ "mio.to" இம் மூலத்தில் இருந்து 2020-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200929223359/https://mio.to/album/Paarvathi+Ennai+Paaradi+%281993%29.
- ↑ "The Indian Express". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930730&printsec=frontpage.