பாரம் (மலர்)

Gossypium herbaceum
Gossypium herbaceum 004.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: Gossypium
இனம்: G. herbaceum
இருசொற் பெயரீடு
Gossypium herbaceum
L
வேறு பெயர்கள்

பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும்.[1][2]

பாரம் என்பது பருத்தி. மிகவும் லேசான பொருளைப் பாரம் எனல் மங்கலவழக்கு. அது கொடிய நஞ்சு கொண்ட பாம்பை நல்லபாம்பு எனவும், கருநிற ஆட்டை வெள்ளாடு எனவும் வழங்குவது போன்றது.

பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.[3]

நெடும்பாரம் [4]
பனம்பாரம் [5]

என்னும் ஊர்களும் உள்ளன.

பாரம் என்னும் மலரையும் சேர்த்து 99 மலர்களைக் குவித்து மகளிர் விளையாடிய செய்தி குறிஞ்சிப்பாட்டில் உண்டு.[6]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1. பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35-32
  2. பசித்தும் வாரேம் பாரமும் இலமே - புறம் 145
  3. அகநானூறு 152
  4. நெடும்பார தாயனார் அந்தண முனிவர்
  5. பனம்பாரனார் புலவர்
  6. குறிஞ்சிப்பாட்டு 92
"https://tamilar.wiki/index.php?title=பாரம்_(மலர்)&oldid=11395" இருந்து மீள்விக்கப்பட்டது