பாரதி புடையெழுத்து

பாரதி புடையெழுத்து அல்லது பாரதி பிரெயில் எனப்படுவது லூயி பிரெயில் வடிவமைத்த ஆறு புள்ளி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓர் புடையெழுத்து முறைமை ஆகும். ஆறு புள்ளிகள் மூன்று கிடைவரிசைகளாகவும் இரண்டு நெடு வரிசைகளாகவும் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு 64 எழுத்துருக்களை சார்பாள வல்லன. 1951ஆம் ஆண்டில் பெய்ரூத் நகரில் கூடிய கருத்தரங்கொன்றில் இந்தியா, பாக்கித்தான் மற்றும் இலங்கை நாடுகளில் வழங்கும் பெரும்பான்மையான மொழிகளை ஒலிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆறு புள்ளி அமைப்பை உருவாக்கும் கருத்தாக்கம் ஏற்பட்டது.[1]

பிரெய்ல் வடிவத்தில் தமிழ் என்னும் சொல்

இந்திய மொழிகள் அனைத்துமே ஒலிசார் எழுத்துருக்களை கொண்டிருப்பதால் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஓர் சீர்தரத்தை உருவாக்குது எளிதாக அமைந்தது. இந்திய மொழிகளில் புடையெழுத்து ஆவணங்கள் தயாரிக்க பாரதி பிரெயிலே இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்கும் பொதுவானதாக உள்ளதால் பன்மொழி ஆவணங்களில் மொழி மாறுவதைக் குறிக்க குறியீடு இல்லாதது குறையாக உள்ளது. ஆனால் பெரும்பாலான ஆவணங்களில் ஆங்கிலமும் இந்தியமொழி ஒன்று மட்டுமே கலந்திருப்பதால் இவற்றை உள்ளடக்கம் கொண்டு பிரித்தறிய இயலும். ஆனால் இரு இந்திய மொழிகள் கலந்த ஆவணங்களில் இது கடினமாக இருக்கக் கூடும். இதற்கு தீர்வாக மொழி மாற்றங்களை பத்தி வாரியாகவோ பக்க வாரியாகவோ அமைத்திட பரிந்துரைக்கப்படுகிறது. ஆங்கில அமைப்பில் உள்ள வரிகளுக்கான சார்பாள்மை இல்லாததால் எழுத்து எழுத்தாக கற்க வேண்டியிருக்கும். இதனால் இந்திய மொழிகளுக்கான பயிற்சிக்காலம் கூடுதலாக வேண்டி உள்ளது.

தமிழ் மொழிக்கான அமைப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாரதி_புடையெழுத்து&oldid=12835" இருந்து மீள்விக்கப்பட்டது