பாரதி சிவாஜி

பாரதி சிவாஜி (Bharati Shivaji) பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்தின் இந்திய நடனக் கலைஞராவார். [1] மேலும், நடன இயக்குனராகவும் மற்றும் எழுத்தாளராகவும் இருக்கிறார். செயல்திறன், ஆராய்ச்சி மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் மூலம் கலை வடிவத்தில் இவர் செய்த பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவரவார். [2] மோகினியாட்டத்தை ஊக்குவிக்கும் நடன அகாதமியான "சென்டர் ஃபார் மோகினியாட்டம்" என்ற நிறுவனத்தின் நிறுவனரான இவர் [3] மோகினியாட்டக் கலை மற்றும் [4] மோகினியாட்டம் [5] ஆகிய இரண்டு புத்தகங்களின் இணை எழுத்தாளர் ஆவார். இவர் சங்கீத நாடக அகாதமி விருது [6] மற்றும் சாகித்ய கலா பரிசத் சம்மன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். [7] இந்திய பாரம்பரிய நடனத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டில் இந்திய அரசு தனது நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ கௌரவத்தை இவருக்கு வழங்கியது. [8]

பாரதி சிவாஜி
பிறப்பு1948
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணிபாரம்பரிய நடனக்கலைஞர்
அறியப்படுவதுமோகினியாட்டம்
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
இலாசிய லட்சுமி
சாகிதிய கலா பரிசத் சம்மன்
நிருத்திய சூடாமணி

சுயசரிதை

பாரதி சிவாஜி தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவில் நகரமான கும்பகோணத்தில் 1948ஆம் ஆண்டு பிறந்தார். [9] இருடைய ஆரம்பகால பரதநாட்டியப் பயிற்சினை லலிதா சாஸ்திரியிட கற்றுக் கொண்டார். [10]ஒடிசியை கேளுச்சரண மகோபாத்திராவிடமிருந்து கற்றுக் கொண்டார். [11] பின்னர், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான கமலாதேவி சட்டோபாத்யாயின் ஆலோசனையின் பேரில், கேரளாவின் பாரம்பரிய நடன வடிவமான மோகினியாட்டம் குறிந்து ஆராய்ச்சி மேற்கொண்டார். [7] சங்கீத நாடக அகாதமியிடமிருந்து ஆராய்ச்சிக்கான உதவித்தொகையைப் பெற்ற பிறகு, இவர் கேரளாவுக்குச் சென்று, கேரள ஆலயக்கலை அறிஞரும், சங்கீத நாடக அகாதமியின் முன்னாள் துணைத் தலைவருமான காவலம் நாராயண பணிக்கரின் கீழ் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். [12] பரதநாட்டியம் மற்றும் ஒடிசியிடமிருந்து தனது கவனத்தை மாற்றிக்கொண்ட இவர் ராதா மராரின் கீழ் மோகினியாட்டத்தில் பயிற்சி பெறத் தொடங்கினார். பின்னர், கலாமண்டலம் சத்தியபாமா, மற்றும் பலராலும் மோகினியாட்டத்தின் தாய் என்று கருதப்படும் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா ஆகியோரின் கீழ் தனது பயிற்சியினை மேற்கொண்டார். [3] . [13]

ஆளுமை

பின்னர், புது தில்லிக்குச் சென்ற சிவாஜி நடன வடிவத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு பிரத்யேக வசதியான "சென்டர் ஃபார் மோகினியாட்டம்" என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். இதில் நடன மரபின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் பங்களித்ததாக அறியப்படுகிறது, [7] ஏற்கனவே சோர்வடைந்த ஒழுக்கத்திற்கு அதிக சோர்வைச் சேர்ப்பதன் மூலம், [10] மற்றும் பாலே போன்ற பிற நடன வடிவங்களுடன் அதை மாற்றியமைப்பதன் மூலம்; சாய்கோவ்சுக்கியின் ஸ்வான் ஏரியின் இவரது மோகினியாட்டத் தழுவல், தனது மகள் விஜயலட்சுமியுடன் நடனமாடியது, போன்றவை அத்தகைய ஒரு முயற்சியாகும். [14] அவரது தயாரிப்புகளில் இரவீந்திரநாத் தாகூரின் பானுசிங்கர் பதவாலி, [15] மணிப்பிரவாளத்தில் சந்திரோத்சவம், இருக்கு வேதத்திலிருந்து சோமாஸ்துதி மற்றும் அஷ்டபதியிலிருந்து தேவகீதம் ஆகிய தழுவல்களும் அடங்கும். [3] கேரளத்தின் பிற பாரம்பரிய கலை வடிவங்களான ஓட்டன் துள்ளல், கைகோட்டிகளி, தையம்பகா மற்றும் கிருஷ்ணனாட்டம் போன்றவற்றிலிருந்து தோரணங்கள், இயக்கங்கள் மற்றும் இசையை மோகினியாட்டத்தில் இவர் இணைத்ததாக அறியப்படுகிறது. இது காவலம் நாராயண பணிக்கரின் கீழ் இவரது பயிற்சியின் மரபினால் சாத்தியமானது. [16]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சிவாஜிக்கு 1999-2000 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [6] நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதினை 2004 குடியரசு தினத்தன்று இந்திய அரசு இவருக்கு வழங்கியது . [8]

நூலியல்

மேலும் காண்க

குறிப்புகள்

  1. "Heritage Club IIT Roorkee". Heritage Club IIT Roorkee. 2015 இம் மூலத்தில் இருந்து 2015-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151126225831/http://www.iitr.ac.in/spicmacay/wincon.html. 
  2. "Mohiniyattam (Bharati Shivaji and Vijayalakshmi)". Exotic India Art. 2015. http://www.exoticindiaart.com/book/details/mohiniyattam-bharati-shivaji-and-vijayalakshmi-IDK992/. 
  3. 3.0 3.1 3.2 "Classical Dancers of India". Classical dancers. 2015. http://classicaldancers.weebly.com/bharati-shivaji.html. 
  4. Art of Mohiniyattam. Lancer, India. 
  5. Mohiniyattam. Wisdom Tree. https://www.amazon.in/dp/8186685367. 
  6. 6.0 6.1 "Sangeet Natak Akademi Puraskar". Sangeet Natak Akademi. 2015 இம் மூலத்தில் இருந்து 31 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160331060603/http://www.sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm#DanceBharatnatyam. 
  7. 7.0 7.1 7.2 "Padmashri Bharati Shivaji". Thiraseela. 2015 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127042338/http://thiraseela.com/artist/profile.php?perfmrid=176. 
  8. 8.0 8.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  9. "Performers of Indian dances and music". Indian Embassy, Russia. 2015 இம் மூலத்தில் இருந்து 27 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127042927/http://www.indianembassy.ru/index.php/ru/media-news/78-cultural-centre/cultural-life/485-performers-of-indian-dances-and-music-. 
  10. 10.0 10.1 "Bound to Kerala by Mohiniyattam". 17 May 2012. http://www.thehindu.com/features/metroplus/bound-to-kerala-by-mohiniyattam/article3428965.ece. 
  11. "Time for Samvaad". 16 November 2014. http://www.thehindu.com/features/metroplus/the-mohiniyattam-collective-by-bharati-shivaji/article6636181.ece. 
  12. "From law to theatre". 31 October 2004. http://www.thehindu.com/thehindu/mag/2004/10/31/stories/2004103100780500.htm. 
  13. "Kalamandalam Kalyanikutty Amma". Smith Rajan. 2015. http://smitharajan.tripod.com/kalyanikuttyamma.html. 
  14. "The power of grace". The Acorn. 2015 இம் மூலத்தில் இருந்து 27 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151127045202/http://www.theacorn.com/news/2014-06-26/Community/The_power_of_grace.html. 
  15. "A seeker’s odyssey". 16 April 2015. http://www.thehindu.com/features/friday-review/a-seekers-odyssey/article7109601.ece. 
  16. "Mohiniattam Style". Kuchipudi. 2015 இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151204232931/http://en.kuchipudi.ru/mohini_e.htm. 

மேலும் படிக்க

  • Bharati Shivaji. Interview with Supriya Rajan. A tete a tete with Mohiniyattam exponent Bharati Shivaji. 2 September 2014. Retrieved on 26 November 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாரதி_சிவாஜி&oldid=10294" இருந்து மீள்விக்கப்பட்டது