பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயில்
பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 26 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள மூலவர் ராமலிங்கேசுவரர் ஆவார். இறைவி பர்வதவர்த்தினி ஆவார்.[1]
சிறப்பு
கீழை ராமேசுவரம் என்றழைக்கப்படுகின்ற இக்கோயிலில் ராமனால் அமைக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன. தமிழகத்தில் இக்கோயிலில் மட்டுமே இவ்வளவு லிங்கங்களை ஒரே கோயிலில் காணமுடியும். பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமன் 107 லிங்கத்தை நிறுவியதாகவும், காசியிலிருந்து அனுமான் கொண்டுவந்த லிங்கத்தை தென்திசையில் நிறுவியதாகவும் கூறுவர்.[1]
குடமுழுக்கு
இக்கோயிலின் குடமுழுக்கு 11 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்றது. [2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ பாபநாசம் 108 சிவாலயம் கோயில் கும்பாபிஷேக விழா, தினமணி, 12 பிப்ரவரி 2019