பாண்டு (பாண்டியன்)

பாண்டு (பொ.பி. 436 - 441) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் முதலாமானவன். களப்பிரர் காலத்தில் தமிழகத்திலிருந்து தன் இரண்டு மகன்களுடன் தப்பி வந்த இவன் அந்நாட்டை அரசாண்டு கொண்டிருந்த மித்தசேனன் என்பவனை தோற்கடித்து இராசராட்டிரப் பாண்டியர் அரசை நிறுவினான். இவனுக்கு பிறகு இவனது மகன்களான பரிந்தன் மற்றும் இளம் பரிந்தன் முறையே இராசராட்டிரம் அரசை ஆண்ட்னர். இவனது ஆட்சியில் இராசராட்டிரம் தெற்கே மகாவலி கங்கையாற்றையும் மற்ற மூன்று திசைகளிலும் கடலையும் எல்லையாகக் கொண்டமைந்தது. இதன் தலைநகரம் அநுராதபுரம் ஆகும். இவன் மகாவலி கங்கையாற்றின் வடபகுதியில் 28 பாதுகாப்பு எல்லைக் கோட்டைகளை கட்டினான்.[1]

இராசராட்டிரப் பாண்டியரின் கீழ் வட இலங்கை (நீல நிறம்) கி.பி. 436 - 463
இராசராட்டிரம்
வம்சம் பாண்டியர்
நாடு இராசராட்டிரம்
எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல்
தலைநகரம் அநுராதபுரம்
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441
பரிந்தன் பொ.பி. 441 - 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 - 463
பிட்டியன் பொ.பி. 463

மூல நூல்கள்

  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் ந்நதமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள்

  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 1-38
"https://tamilar.wiki/index.php?title=பாண்டு_(பாண்டியன்)&oldid=42129" இருந்து மீள்விக்கப்பட்டது