பாண்டரங்கண்ணனார்

பாண்டரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். புறநானூறு 16[1] எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அதில் இவர் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் வெற்றியைப் பாராட்டியுள்ளார்.

புலவர் பெயர் விளக்கம்

பாண்டரங்கம் என்பது சிவபெருமானின் ஆடல்களில் ஒன்று.

பெருநற்கிள்ளியின் இராசசூயம்

இவன் முருகன் போல் சீற்றம் கொண்டவனாம்.
குதிரைப்படை கொண்டு பகைவரை வென்றானாம்.
பகைநாட்டு வீட்டுக்கூரை மரங்களை விறகாக்கிக் கொண்டானாம்.
விளைவயல்களைக் கவர்ந்துகொண்டானாம்.
நீர்த்துறைகளில் தன் களிறுகள் படிய விட்டுவிட்டானாம்.
இவன் ஊரைக் கொளுத்திய தீ ஞாயிறு போல் ஒளி வீசியதாம்.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=பாண்டரங்கண்ணனார்&oldid=11947" இருந்து மீள்விக்கப்பட்டது