பாக்கியலட்சுமி (திரைப்படம்)
பாக்கியலட்சுமி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
பாக்கியலட்சுமி | |
---|---|
இயக்கம் | கே. வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | பட்டண்ணா நாராயணன் அண்ட் கம்பனி |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | நவம்பர் 7, 1961 [1] |
ஓட்டம் | 2:58:19 |
நீளம் | 16049 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள், திரைப்படத்துக்கு இசையமைத்தார்கள். பாடல்களை, பாபநாசம் சிவன், கண்ணதாசன், வி. சீதாராமன் ஆகியோர் எழுதியிருந்தனர். ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, (ராதா) ஜெயலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, ரேணுகா ஆகியோர் பின்னணி பாடினர்.
சிங்கார சோலையே என்ற பாடல் முதலில், கல்லூரி ராணிகாள் என எழுதப்பட்டு, இசைத்தட்டிலும் அப்படியே வெளிவந்தது. தணிக்கைக்குழு முதல் நாலு வரிகளை அனுமதிக்காததால், பின்னர், திரைப்படத்தில் சொற்கள் மாற்றப்பட்டன. வரலட்சுமி வருவாய் அம்மா என்ற பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | சிங்கார சோலையே! உல்லாச வேளையே!.. | ஏ. எல். ராகவன் & கே. ஜமுனாராணி | கண்ணதாசன் | 04:54 |
2 | காதலென்றால் ஆணும் பெண்ணும்.. | ஏ. எல். ராகவன் & பி. சுசீலா | 03:50 | |
3 | காதலெனும் வடிவம் கண்டேன்.. | பி. சுசீலா | 03:23 | |
4 | மாலைப் பொழுதின் மயக்கத்திலே.. | 04:26 | ||
5 | காண வந்த காட்சியென்ன.. | 03:26 | ||
6 | கண்ணே ராஜா! கவலை வேண்டாம்.. | 03:18 | ||
7 | பார்த்தீரா! ஐயா பார்த்தீரா!.. | எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி | 02:30 | |
8 | அம்மா! அம்மா! கவலை வேண்டாம்.. | ரேணுகா | 02:56 | |
9 | வரலட்சுமி வருவாயம்மா.. | (ராதா) ஜெயலட்சுமி | வி. சீதாராமன் | |
10 | பளிங்கு மணப்பந்தலிலே.. | பாபநாசம் சிவன் | ||
11 | என்னை நான் அறியாத சின்ன வயசிலே.. | பி. சுசீலா | 02:12 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171121004817/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961-cinedetails19.asp. பார்த்த நாள்: 2022-04-22.
- ↑ Bhagyalakshmi Tamil Movie
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 34 — 35.