பஸ்மாசூர மோகினி
பஸ்மாசூர மோகினி (Bhasmasura Mohini) 1937 அக்டோபர் 2 இல் வெளிவந்த 10000 அடி புராணத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ பட நிறுவனம் தயாரித்து சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். சீனிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பஸ்மாசூர மோகினி | |
---|---|
இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ |
நடிப்பு | சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை பி. எஸ். ஸ்ரீநிவாசராவ் பி. கன்னையா ராஜு எம். லட்சுமண ஐயர் கே. டி. ருக்மணி பி. கே. சுசீலாதேவி எம். ஏ. ராஜமணி |
வெளியீடு | அக்டோபர் 2, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 10000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உப தகவல்
இப்படத்துடன், ‘மிஸ்டர் டைட் அண்டு லூஸ்‘ எனும் நகைச்சுவைத் திரைப்படமும் திரையிடப்பட்டது. அப்படத்தில், பி. தசரதராவ், சரோஜினி ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027055133/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails24.asp. பார்த்த நாள்: 2016-11-04.