பவானிசாகர்


பவானிசாகர் (ஆங்கிலம்:Bhavanisagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு தமிழ்நாடு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் உள்ளது. [4] பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது.

பவானிசாகர்
—  பேரூராட்சி  —
பவானிசாகர்
இருப்பிடம்: பவானிசாகர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°28′45″N 77°08′03″E / 11.479200°N 77.134100°E / 11.479200; 77.134100Coordinates: 11°28′45″N 77°08′03″E / 11.479200°N 77.134100°E / 11.479200; 77.134100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் சத்தியமங்கலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பவானிசாகர்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஏ. பன்னாரி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

7,710 (2011)

1,322/km2 (3,424/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.83 சதுர கிலோமீட்டர்கள் (2.25 sq mi)

285 மீட்டர்கள் (935 அடி)

இணையதளம் www.townpanchayat.in/bhavanisagar

அமைவிடம்

பவானிசாகர் பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து 86 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் சத்தியமங்கலம் 15 கி.மீ.; மேற்கில் மேட்டுப்பாளையம் 36 கி.மீ.; வடக்கில் தாளவாடி 45 கி.மீ.; தெற்கில் புஞ்சைப் புளியம்பட்டி 16 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

5.83 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,134 வீடுகளும், 7,710 மக்கள்தொகையும் கொண்டது.[6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. அரசு அலுவலர் பயிற்சி நிலையம்
  5. பவானிசாகர் பேரூராட்சியின் இணையதளம்
  6. Bhavanisagar Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=பவானிசாகர்&oldid=123798" இருந்து மீள்விக்கப்பட்டது