பவதாரிணி அனந்தராமன்

பவதாரிணி அனந்தராமன், (பிறப்பு 25 ஜூலை 1980) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய கர்நாடக இசைக்கலைஞரும் பாடகியுமாவார். கருநாடக இசையில் பெண் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கொண்டாடப்படும் டி.கே.பட்டம்மாளின் மூத்த சிஷ்யையாகக் கருதப்படும் இவர்[1], இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் ஒவ்வொரு ஆண்டும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதோடு உலகெங்கிலும் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், கருநாடக இசையைப் பரப்பி வருகிறார். மூத்த இசையமைப்பாளர் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் குடும்பத்தைச் சேர்ந்த பவதாரிணி, ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்முறை இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

பவதாரிணி அனந்தராமன்
பிறப்பு25 சூலை 1980 (1980-07-25) (அகவை 44)
பிறப்பிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர், வீணை இசைக்கலைஞர்
இசைத்துறையில்1987 ஆம் ஆண்டு முதல்
வெளியீட்டு நிறுவனங்கள்சுவாதியின் சமஸ்கிருதி தொடர்

நளினி அனந்தராமன் மற்றும் எஸ்.அனந்தராமன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த பவதாரிணிக்கு அவரது தாயாரான, நளினி அனந்தராமனே, முதல் குருவாக இருந்து பாட்டுப்பயிற்சியை அளித்துள்ளார். ஏனெனில் அவரும் டி.கே.பட்டம்மாளிடம் பயிற்சி பெற்ற வீணை வாசிப்பாளரும் பாடகருமாவார்.[2]

பவதாரிணி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சுற்றிப்பயணம் செய்து இசை விழாக்களில் பாடியுள்ளார். பவதாரிணியின் கட்டளை குரல், கருநாடக இசை மற்றும் பக்தி இசையின் பல்வேறு வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

சாதனைகள்

  • மூன்று வருடங்கள் ஸ்பிக் ஸ்காலர்ஷிப் பெற்றவர்.
  • குரல் இசைக்கான ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் ஸ்காலர்ஷிப் பெற்றவர்.
  • இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திடமிருந்து CCRT பெல்லோஷிப் (கலாச்சார வளம் மற்றும் திறமைக்கான மையம்) பெற்றவர்.[3]
  • 2002ல் சென்னை அகில இந்திய வானொலியின் 'ஏ' கிரேடு கலைஞர்.
  • கர்நாடக இசை மற்றும் பக்தி இசைத் துறையில் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி 2009 இல் 'சிவாஜி பிருது' பெற்றார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பவதாரிணி_அனந்தராமன்&oldid=27792" இருந்து மீள்விக்கப்பட்டது