பழைய கோடைகால அரண்மனை

பழைய கோடைகால அரண்மனை (Old Summer Palace) சீன மொழியில் யுவான்மிங் யுவான் என்றும் அழைக்கப்படும் இது முன்னர் பேரரசின் தோட்டம் என்றப் பெயரைக் கொண்டிருந்தது. பல அரண்மனைகளையும், தோட்டங்களையும் கொண்ட இது சீனாவில் பெய்ஜிங்கில்,இன்றைய ஹைடியன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பெய்ஜிங்கின் முன்னாள் பேரரசின் நகரப் பிரிவின் கோட்டைகளிலிருந்து 8 கிலோமீட்டர் (5.0 மைல்) வடமேற்கே உள்ளது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட பழைய கோடைகால அரண்மனை சிங் வம்சத்தின் கியான்லாங் பேரரசர் மற்றும் அவரது வாரிசுகளின் முக்கிய இல்லமாக இருந்தது. மேலும் அவர்கள் இங்கு மாநில விவகாரங்களை கையாண்டனர்; தடைசெய்யப்பட்ட நகரம் முறையான விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சீன ஏகாதிபத்திய தோட்டம் மற்றும் அரண்மனை வடிவமைப்பின் உச்சம் என்று பரவலாகக் கருதப்பட்ட பழைய கோடைகால அரண்மனை அதன் விரிவான தோட்டங்கள், அதன் கட்டிடக் கட்டமைப்பு மற்றும் ஏராளமான கலை மற்றும் வரலாற்று பொக்கிசங்களுக்காக அறியப்பட்டது. இது "தோட்டத்தின் தோட்டம்" என அதன் புகழ்பெற்ற காலத்தில் புகழ் பெற்றது. இந்த அரண்மனை மிகப் பெரியதாக இருந்தது - 3.5 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான (860 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டிருந்தது.

பேரரசின் தோட்டங்கள்
பழைய கோடைகால அரண்மனையின் திட்டம்

தோட்டங்கள்

பழைய கோடைக்கால அரண்மனையில் உள்ள தோட்டங்கள் மூன்று தோட்டங்களால் ஆனவை:

  1. சரியான ஒளிர்வு தோட்டம்;
  2. நித்திய வசந்தத்தின் தோட்டம்;
  3. நேர்த்தியான வசந்த தோட்டம்;

இவை அனைத்தும் சேர்ந்து, 3.5 சதுர கிலோமீட்டர்கள் (860 ஏக்கர்கள்), இது தடைசெய்யப்பட்ட நகர மைதானத்தின் கிட்டத்தட்ட ஐந்து மடங்காகவும், வத்திக்கான் நகரத்தின் எட்டு மடங்கு அளவும் இருக்கும். இங்கு அரங்குகள், தங்குமிடங்கள், கோயில்கள், காட்சியகங்கள், தோட்டங்கள், ஏரிகள் மற்றும் பாலங்கள் போன்ற நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் மைதானத்தில் இருந்தன.

கூடுதலாக, சீன கலைப்படைப்புகள் மற்றும் தொல்பொருட்களின் நூற்றுக்கணக்கான மாதிர்கள், இலக்கியப் படைப்புகள் மற்றும் தொகுப்புகளின் தனித்துவமான நகல்களுடன் அரங்குகளில் சேமிக்கப்பட்டன. தெற்கு சீனாவின் பல பிரபலமான இயற்கைக்காட்சிகள் பேரரசின் தோட்டங்களில் மீண்டும் உருவாக்கப்பட்டன.

கலைபடைப்புகள்

தற்போது வரை, பழைய கோடைக்கால அரண்மனையிலிருந்து எடுக்கப்பட்ட பல நினைவுச்சின்னங்கள் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் உள்ளன. சீன அரசாங்கம் அவற்றை மீட்க முயற்சித்த போதிலும், நித்திய வசந்த தோட்டத்திலிருந்து ஒரு சில சிலைகள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளன. நோர்வேயின் பேர்கனில் உள்ள கோட் கலை அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 21 கலைப் பொருட்களில் ஏழு, 2014 ஆம் ஆண்டில் பீக்கிங் பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. சீனா டெய்லி பத்திரிக்கையின் கூற்றுப்படி இந்த அருங்காட்சியகத்திற்கு ஒரு நில விற்பனையாளரான பழைய மாணவர் உவாங் நுபோ என்பவர் 10 மில்லியன் நோர்வே குரோனர் (அமெரிக்க $ 1.6 மில்லியன்) நன்கொடையாக வழங்கினார். [1] [2]

பல நேர்த்தியான கலைப்படைப்புகள் - சிற்பங்கள், பீங்கான், ஜேட், பட்டு அங்கிகள், விரிவான ஜவுளி, தங்கப் பொருட்கள் மற்றும் பல - கொள்ளையடிக்கப்பட்டு இப்போது உலகெங்கிலும் உள்ள 47 அருங்காட்சியகங்களில் காணப்படுகின்றன என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது[3]

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் பழைய கோடைகால அரண்மனையைச் சேர்க்க விண்ணப்பிக்கலாமா என்பது சீனாவில் இன்னும் விவாதத்தில் உள்ளது. [4]

பொது மக்களுக்கு அனுமதி

பழைய கோடைக்கால அரண்மனையின் இடிபாடுகளை பொது மக்கள் இப்போதும் பார்வையிடலாம். மேலும், இது ஹைடியன் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். [5] பெய்ஜிங் சுரங்கப்பாதையின் 4 வது வரிசையில் உள்ள யுவான்மிங்யுவான் பார்க் நிலையத்திலிருந்து இதை அணுகலாம்.

புகைப்படத் தொகுப்பு

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பழைய_கோடைகால_அரண்மனை&oldid=28757" இருந்து மீள்விக்கப்பட்டது