பழனி சாக்கடை சித்தர்

சாக்கடை சித்தர் என்பவர் பழனி மலையின் அடிவாரமான அய்யம்புள்ளி பகுதியில் வாழ்ந்து மறைந்த சித்தராவார்.[1] இப்பெயரைக் கொண்டே பல்வேறு சித்தர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலும் சாக்கடை சித்தர் என்றொருவர் இருந்துள்ளார்.[2]

பழனி சாக்கடை சித்தர்
பிறப்புவட இந்தியா
தேசியம்இந்தியர்
முக்கிய ஆர்வங்கள்
சாக்கடை நீரைக் குடித்தல் மற்றும் அதில் குளித்தல்

சாக்கடை சித்தரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் வடநாட்டிலிருந்து தனது 55 வயதில் பழநிக்கு வந்தார்.[3] பழநிமலையில் முருகன் கோயிலுக்கு செல்லுகின்ற அய்யம்புள்ளி சாலையில் சாக்கடை மேடையின் மீது கூடாரமிட்டு வாழ்ந்தார்.[3] சாக்கடை நீரைப் பகுவதையும், அதிலேயே குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் சாக்கடை சித்தர் என பக்தர்கள் அழைத்தனர்.[3]

யாரிடமும் பேசாமல் இருப்பார். இவரை வழிபட்டால் நல்லது நடக்கும் என உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பலரும் வணங்கினர்.[3] உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார்.[3] இவர் 2016 ஆண்டு மே 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.[1]

ஊடகங்களில்

தமிழ் தொலைக்காட்சியான வேந்தர் தொலைக்காட்சியில் மூன்றாவது கண் என்ற தொடரின் 35 வது நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய செய்திகளுடன் நேரில் சென்று கண்ட நிருபரின் அனுபவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பழனி_சாக்கடை_சித்தர்&oldid=27979" இருந்து மீள்விக்கப்பட்டது