பள்ளிகொண்டபுரம்

பள்ளிகொண்டபுரம் நீல. பத்மநாபனின் சிறந்த புதினங்களுள் ஒன்று. திருவனந்தபுரத்தின் பின்னணியில் அமைந்த கதை. அனந்த நாயரின் வாழ்க்கையைப் பற்றிய தேடல்களும் அதற்கான கேள்விகளுமே புதினம் முழுவதும் பரவலாக உள்ளன.

இப்புதினம் முதல் பதிப்பாக டிசம்பர் 1970-இல் வாசகர் வட்டம், சென்னை என்ற நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. பிறகு இரண்டாம் பதிப்பு ஏப்ரல் 1985 இலும், மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2000-த்திலும் மணிவாசகர் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. நான்காவது பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு Pallikondapuram - The City Where God Sleeps 1982 இல் முதல் பதிப்பாக கிறித்தவ இலக்கியக் கழகம் நிறுவனத்தராலும் இரண்டாவது பதிப்பு 2007 இல் இந்தியன் ரைட்டிங் நிறுவனத்தினரால் Where The Lord Sleeps என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. தேசிய புத்தக அறக்கட்டளை இப்புதினத்தை ஆதான் பிரதான் திட்டத்தில் தேர்ந்தெடுத்து அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்தி, மலையாளம் (1982 இலும், 1998 இலும் இரண்டு பதிப்புகள்), உருது, பஞ்சாபி, மராட்டி, குசராத்தி, அசாமி, தெலுங்கு, ஒரியா, கன்னட, வங்க மொழிகளில் ஏற்கனவே வந்துவிட்டன. உருசிய மொழியில் லூபா பைச்சிகினா Gorod Spyashchego Bogo என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மேலும் இப்புதினத்தை, பல்வேறான ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வு நிறைஞர், முனைவர் பட்டங்களுக்காகத் தமிழ் நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் ஆய்வுசெய்து பட்டங்கள் எடுத்திருக்கிறார்கள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பள்ளிகொண்டபுரம்&oldid=16337" இருந்து மீள்விக்கப்பட்டது