பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 323.
பறநாடு என்பது பறம்புநாடு. இது 300 ஊர்களைக் கொண்டது. சங்ககாலத்தில் இதன் அரசன் பாரி.
பாடல் சொல்லும் செய்தி
அவன் பிரிந்துள்ள காலத்தில் அவள் ஏங்குகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். அவளைத் தேற்றச் சொல்பவை:
கற்பு மேம்படுவி! இதோ இதனைக் காண வருக. மழைப்புயல் உன் கூந்தலைப்போல் கால் இறங்கியுள்ளது. அவர் இவ்வூர் அலர் கெட வருவர் என்பது வாய்மையாகிவிட்டது. - என்கிறாள்.
கற்பு மேம்படுவி!
- கற்பில் மேம்பட்டு விளங்குபவளே
இடி
- பாம்பின் பை பட இடிக்கும். இடிமுழக்கம் கேட்டால் படமெடுத்தாடும் பாம்பின் படம் தானே சுருங்கிவிடும்.
பையத் தடவரல் ஒதுக்கம்
- தலைவி மெல்ல மெல்லத் தடவித் தடவி அடியெடுத்து நடப்பாளாம்.
புயல்
- தலைவியின் கூந்தலைப் போலக் கால் வீழ்த்ததாம்
- மூங்கில் காட்டில் யானைக்கூட்டம் செல்வது போல வானில் செல்கிறதாம்.
ஆலி அழிதுளி
- வானத்தில் உலவும் மழைமேகத்தில் நீர்த்துளிகள் உருண்டு திரண்டு அழிந்து சிறுசிறு துளியாக உள்ளனவாம்.