பரிந்தன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பரிந்தன் (பொ.பி. 441 - 444) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் இரண்டாமானவன். இவன் பாண்டு (பொ.பி. 436 - 441) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் முதலமானவனின் மூத்த மகனாவான். இவனுக்குப் பிறகு இவனது தம்பியான இளம் பரிந்தன் (பொ.பி. 444 - 460) இராசராட்டிர அரசை ஆண்டான். இவனது வரலாறு அறியப்படவில்லை ஆயினும் இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்தான் என அறிய முடிகிறது.[1]
இராசராட்டிரம் | |
---|---|
வம்சம் | பாண்டியர் |
நாடு | இராசராட்டிரம் |
எல்லை | மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல் |
தலைநகரம் | அநுராதபுரம் |
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல் | |
பாண்டு (பாண்டியன்) | பொ.பி. 436 - 441 |
பரிந்தன் | பொ.பி. 441 - 444 |
இளம் பரிந்தன் | பொ.பி. 444 - 460 |
திரிதரன் | பொ.பி. 460 |
தாட்டியன் | பொ.பி. 460 - 463 |
பிட்டியன் | பொ.பி. 463 |
மூல நூல்கள்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்
மேற்கோள்கள்
- ↑ சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 29