பரமந்தூர் ஆதிகேசவபெருமாள் கோயில்
பரமந்தூர் ஆதிகேசவபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், பெருமந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
மூலவர்
இக்கோயிலின் மூலவர் ஆதிகேசவபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் உள்ளார். கருவறைக்கு முன்பாக இரு புறத்திலும் ஜெயன், விஜயன் உள்ளனர்.
கோயில் அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும் கொடி மரமும் உள்ளன. முன் மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர், ராமானுஜர், மணவாள முனிவர், நம்மாழ்வார், வரதராஜப்பெருமாள், லட்சுமி நரசிம்மப்பெருமாள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. இங்கு சொர்க்கவாசலும் உள்ளது. திருச்சுற்றில் பரிமளவள்ளித்தாயார் சன்னதியும், பராச்சர மகரிஷியும் உள்ளன. கோயிலின் முன்பாக குளம் உள்ளது.
சொர்க்கவாசல்
இக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]