பரதேசி', தியாகலிங்கத்தின் மூன்றாவது நாவல். சொந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு, வெள்ளைத் தோலர்கள் நாட்டிலே அலையும் ஈழத்தமிழர்களைப் பொதுவாகப் பரதேசி எனக் குறிப்பிடுகின்றார். பரதேசி என்பவன் துறவியும். ஈழத்தமிழர்கள் பிறந்த மண்ணையும், உறவுகளையும் துறந்து வாழ்பவர்கள். அவர்கள் நாடு நாடாக அலைந்து திரிந்து வியிறுவளர்க்கும் பிச்சைக்காரர்களும். எனவே, பரதேசி என்கின்ற சொல், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களைக் குறிப்பதற்குப் பொருத்தமானது.' என எஸ்.பொவால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல் இது.

பரதேசி
பரதேசி
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் ச. பொன்னுத்துரை
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
பிரிதா
உண்மையான
தலைப்பு
பரதேசி
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
பரதேசி
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
2
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வெளியிடப்பட்டது November 6, 2021
இரண்டாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 210
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
978-1794846340
முன்னைய
நூல்
நாளை
அடுத்த
நூல்
வரம்


காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவிலும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

பாரதியார் கனவு கண்ட இத்தகைய புதுமைப் பெண்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே தோன்றுதல் நமது வாழ்வியலுக்கு மிகவும் அவசியம். பெண்ணியம் என்பது மலிவான கோசம் அல்ல. அது நமது வாழ்வியலை செம்மைபடுத்தவதற்கு அவசியமான தர்மம். இத்தகைய ஒரு நம்பிக்கையிலேதான் பரதேசி எழுதப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/index.php?title=பரதேசி&oldid=16215" இருந்து மீள்விக்கப்பட்டது