பரதன் (1992 திரைப்படம்)
பரதன் (Bharathan) 1992 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் பானுப்ரியா நடிப்பில், இளையராஜா இசையில், சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில், ஏ. எஸ். இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் இந்தியில் காயல் என்ற பெயரில் சன்னி தியோல் மற்றும் மீனாட்சி சேஷாத்ரி நடிப்பில் மறுஆக்கம் செய்யப்பட்டது[1][2].
பரதன் | |
---|---|
இயக்கம் | சபாபதி தட்சிணாமூர்த்தி |
தயாரிப்பு | ஏ. எஸ். இப்ராகிம் ராவுத்தர் |
கதை | ராஜ்குமார் சந்தோஷி |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
விநியோகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 16, 1992 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
பரத் (விஜயகாந்த்) சிறையிலிருக்கும் மரணதண்டனைக் கைதி.
பரத்தின் கடந்த காலம்: பரத் இந்துவைக் (பானுப்ரியா) காதலிக்கிறான். அவனது அண்ணன் ராம்குமார் (எஸ். பி. பாலசுப்ரமணியன்) மற்றும் அண்ணி ஜானகி (சங்கீதா). பரத் ஒரு அரசுப்பணியில் சேரவேண்டுமென்று ராம்குமார் விரும்புகிறார். ஆனால் பரத் குத்துச்சண்டை வீரராக விரும்புகிறான்.
திடீரென்று ஒருநாள் ராம்குமார் காணாமல் போகிறார். பரத் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ராம்குமாருக்கு என்னவானது என ராம்குமாரின் வேலைக்காரன் (சந்திரசேகர்) பரத்திடம் கூறுகிறான். தொழிலதிபர் கங்காதரன் (ஆனந்தராஜ்) ராம்குமாருக்கு தொழில்ரீதியாக உதவுகிறான். இதனால் ராம்குமார், கங்காதரனிடம் நன்றியோடு பழகுகிறான். இதை சாதகமாக எடுத்துக்கொள்ளும் கங்காதரன், ராம்குமாரின் நிறுவனத்தை தன் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறான். இதைக் காவல்துறைக்குத் தெரிவிக்க முயலும் ராம்குமாரை கங்காதரன் கடத்துகிறான். தன் அண்ணன் இருக்கும் இடமறிந்து அவரை மீட்கச்செல்கிறான் பரத். ஆனால் ராம்குமாரைக் கொன்று அந்தப் பழியை பரத் மீது சுமத்தி அவனை சிறைக்கு அனுப்புகிறான் கங்காதரன். பரத்தின் வழக்கறிஞரான விஸ்வநாதனும் கங்காதரனுடன் இணைந்து அவனுக்கு மரண தண்டனை பெற்றுத்தருகிறார்கள். ஜானகி தற்கொலை செய்துகொள்கிறாள்.
நிகழ்காலம்: சிறையிலிருந்து தப்பிக்கும் பரத் தனக்கு துரோகம் செய்த வழக்கறிஞர் விஸ்வநாதனைக் கொல்கிறான். கங்காதரனைப் பாதுகாக்க காவல் அதிகாரி ஜான்சன் (நெப்போலியன்) நியமிக்கப்படுகிறார். பரத் நிரபராதி என்ற உண்மை தெரியவருகிறது. எனவே கங்காதரனைக் கொலைசெய்யவிடாமல் தடுத்து பரத்தை நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிரூபித்து விடுதலை பெற்றுத்தர எண்ணுகிறார். ஆனால் இந்துவைக் கடத்திய கங்காதரனிடமிருந்து அவளை மீட்கும் பரத், கங்காதரனைக் கொன்று பழிதீர்க்கிறான்.
நடிகர்கள்
- விஜயகாந்த் - பரதன்
- பானுப்ரியா - இந்து
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் - ராம்குமார்
- ஆனந்தராஜ் - கங்காதரன்
- நெப்போலியன் - ஜான்சன்
- சங்கீதா - ஜானகி
- சந்திரசேகர் - ராம்குமாரிடம் வேலைசெய்பவர்
- வாசு விக்ரம் - கைதி
- ஆர். சுந்தர்ராஜன்
- ஸ்ரீவித்யா - லட்சுமி
- பொன்னம்பலம்
- ஸ்ரீஹரி - உத்தம்சிங்
- பிரபுதேவா - சிறப்புத் தோற்றம்
- டிஸ்கோ சாந்தி - பாடலுக்கு நடனம்
இசை
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.
வ. எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | காலநீளம் |
---|---|---|---|---|
1 | அழகே அமுதே | இளையராஜா | பொன்னடியான் | 4:45 |
2 | நல்வீணை நாதம் | இளையராஜா | பொன்னடியான் | 1:55 |
3 | போட்டதெல்லாம் | மனோ | வாலி | 5:00 |
4 | புன்னகையில் மின்சாரம் | இளையராஜா, எஸ். ஜானகி | வாலி | 5:04 |
5 | வா வாத்தியாரே | சித்ரா | கங்கை அமரன் | 4:49 |