பயினி
Vateria indica.jpg
Vateria indica, Illustration.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malvales
குடும்பம்: Dipterocarpaceae
பேரினம்: Vateria
இனம்: V. indica
இருசொற் பெயரீடு
Vateria indica
L.
வேறு பெயர்கள்
  • Vateria malabarica Blume

பயின் என்பது அரக்கு. பயின் மரத்தைப் பயினி (Vateria indica) என்றனர். குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பயினி.[1]

நாவாய்க்கலக் கப்பலில் ஓட்டை விழும்போது பயின் என்னும் அரக்கால் ஓட்டையைப் பழங்காலத் தமிழர்கள் அடைத்தார்களாம்.[2]

வயிரத்துக்குப் பட்டை தீட்டும் சிறுகாரோடன் குச்சி நுனியையும் வயிரக் கல்லையும் பயின் (அரக்கு) வைத்து இணைத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு சாணைக்கல்லில் பட்டை தீட்டுவான். இந்த வயிரக்கல் போல என்ன துன்பம் வந்தாலும் பிரியமாட்டோம் என்கின்றனர் ஒரு காதலர்.[3]

பட்டை தீட்டும் வயிரக்கல் போலத் துன்புறும்போதும் தன் காதலைத் தாயிடம் கூறமுடியவில்லையே எனக் கவலைப்படுகிறாள் ஒரு தலைவி.[4]

இவற்றையும் காண்க

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Vateria indica
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு 69
  2. இதையும், கயிறும், பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும், திசையறி நீகான் - பரிபாடல் 10-54
  3. சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் - அகம் 1-5,
  4. சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேன் - அகம் 356-3,
"https://tamilar.wiki/index.php?title=பயினி&oldid=11383" இருந்து மீள்விக்கப்பட்டது