ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. பல பொருட்களைக் குறிப்பது பன்மை. [1] [2] உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. உயர்திணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை. அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை. கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.

எடுத்துக்காட்டு

  • மலர் விரிந்தது - இதில் 'மலர்' என்பது ஒருமை.
  • மலர்கள் விரிந்தன. - இதில் 'மலர்கள்' என்பது பன்மை

அறுவகைப் பெயர்களில் பன்மை

பெயர் ஒருமை பன்மை
பொருள் மலர் மலர்கள்
இடம் மலை மலைகள்
காலம் நொடி நொடிகள்
சினை விரல் விரல்கள்
குணம் அழகு (பல்வகை) அழகு
தொழில் செலவு செலவுகள்

மேற்கோள்கள்

  1. ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை (நன்னுல் 263)
  2. படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின் பெறப்படும் திணைபால் அனைத்தும் ஏனை இடத்து அவற்று ஒருமைப் பன்மைப் பாலே (நன்னூல் 265)
"https://tamilar.wiki/index.php?title=பன்மை&oldid=20327" இருந்து மீள்விக்கப்பட்டது