பத்மாவத்
பத்மாவத் (Padmaavat')' (முந்தைய பெயர் பத்மாவதி), பத்மாவதி காவியம் திரைப்படமாக, 24 சனவரி, 2018 அன்று மும்பையில் வெளியானது. இந்த இந்தி மொழி திரைப்படத்தை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. நடிகை தீபிகா படுகோண் பத்மாவதியாகவும், நடிகர் ரண்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.[4]
பத்மாவத் | |
---|---|
இயக்கம் | சஞ்சய் லீலா பஞ்சாலி |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | மாலிக் முகமது ஜெய்சி எழுதிய பத்மாவதி காவியம்[1] |
இசை | சஞ்சய் லீலா பன்சாலி சஞ்சித் பல்ஹாரா |
நடிப்பு | தீபிகா படுகோண் சாகித் கபூர் ரண்வீர் சிங் |
ஒளிப்பதிவு | சுதீப் சட்டர்ஜி |
படத்தொகுப்பு | ஜெயந்த் ஜாதர் சஞ்சய் லீலா பன்சாலி அக்கிவ் அலி |
கலையகம் | பன்சாலி புரடக்சன்ஸ் வியாகம் 18 மோசன் பிக்சர்ஸ் |
விநியோகம் | வியாகம் 15 மோசன் பிக்சர்ஸ் (இந்தியா) பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 25, 2018 |
ஓட்டம் | 163 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழி |
ஆக்கச்செலவு | ₹190 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹545.95 கோடி[3] |
கதைச் சுருக்கம்
1540இல் மாலிக் முகமது ஜெய்சி என்ற சூபிக் கவிஞர் எழுதிய பத்மாவதி காவியம் என்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேவார் கோட்டையை கைப்பற்றிய தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகளிடமிருந்து, தங்களை காத்துக் கொள்ள வேண்டி, ராணி பத்மாவதி உள்ளிட்ட இராசபுத்திர அரச குடும்ப பெண்களும் மற்றும் பணிப்பெண்களும் கூட்டுத் தீக்குளிப்பு செய்து மாண்ட கதையைத் இத்திரைப்படம் விளக்குகிறது.[1][5][6]
பிணக்குகள்
இத்திரைப்படத்தின் கதை, இராசபுத்திர குலப் பெண்களின் கண்ணியத்தை குறைப்பதாக உள்ளது எனக் கூறி, மேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பிணக்குகளால், நவம்பர், 2017இல் வெளியாக வேண்டிய இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் தள்ளிப்போயிற்று.[7][8][9]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Padmavati trailer: Sanjay Leela Bhansali's new film looks grand, spellbinding and very expensive!". Business Today. 9 October 2017 இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://www.businesstoday.in/trending/entertainment/padmavati-trailer-sanjay-leela-bhansali-shahid-kapur-deepika-padukone-ranveer-singh/story/261682.html.
- ↑ 2.0 2.1 Iyer, Sanyukta (7 January 2018). "Sanjay Leela Bhansali's magnum opus Padmavat starring Deepika Padukone, Ranveer Singh and Shahid Kapoor to release on Jan 24 – Mumbai Mirror -". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/padmavat-to-release-on-jan-25/articleshow/62398184.cms. பார்த்த நாள்: 7 January 2018.
- ↑ http://www.bollywoodhungama.com/news/box-office-special-features/box-office-worldwide-collections-day-wise-break-padmaavat/
- ↑ Padmaavat (2018)
- ↑ ஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம்
- ↑ "Bhansali, Viacom18 Motion Pictures join hands for 'Padmavati'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 17 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Bhansali-Viacom18-Motion-Pictures-join-hands-for-Padmavati/articleshow/54781841.cms.
- ↑ ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியீட்டுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம்
- ↑ ‘Padmaavat’: Incidents that made headlines about the Deepika Padukone-Ranveer Singh-Shahid Kapoor film
- ↑ Padmavati controversy: Real reason behind the clamour to ban Sanjay Leela Bhansali film is clash of inflated egos