பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி (நூல்)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி என்பது குறித்த காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அது பயிலப்பட்ட முறை குறித்தும் ஆய்வு செய்யும் ஒரு நூலாகும். இதைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா, சரஸ்வதி சிவலிங்கராசா ஆகியோர் எழுதியுள்ளனர். இதன் முதற் பதிப்பு 2000 ஆவது ஆண்டில் வெளியானது. இரண்டாவது பதிப்பைக் குமரன் புத்தக இல்லம் 2008ல் வெளியிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி
நூல் பெயர்:பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி
ஆசிரியர்(கள்):எஸ். சிவலிங்கராசா, சரஸ்வதி சிவலிங்கராசா
வகை:கல்வி வரலாறு
துறை:யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி
காலம்:19 ஆம் நூற்றாண்டு
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:117
பதிப்பகர்:குமரன் புத்தக இல்லம் (2008)
பதிப்பு:2000, 2008

நோக்கம்

யாழ்ப்பாணத்தின் கலை, கல்வி, இலக்கிய, சமூக, பொருளாதார வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டு முக்கியமானது. இந்தச் சூழலில் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு ஈழம் முழுவதற்கும் எவ்வாறு வளர்ந்து சென்றது என்பதை விளக்குவதும், ஈழத்துக்கு வெளியேயும் இந்த மரபு எவ்வாறு நிறுவப்பட்டது என்பதையும், பொதுவான தமிழ்ப் பண்பாட்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்விக்குரிய இடம் என்பதைக் கண்டறிவதும் இந்த நூலின் நோக்கம் என்பது நூலாசிரியர் இந்நூலுக்கு எழுதிய அறிமுகத்திலிருந்து தெரிகிறது. அத்துடன், இந்தக் கல்வி மரபு தோற்றுவித்த அறிஞர்களின் தமிழ்ப் பணிகள் பற்றிய ஆய்வும் இந்நூலின் நோக்கமாகும்.[1]

உள்ளடக்கம்

இந்நூல், பின்வரும் ஏழு அத்தியாயங்களையும் ஒரு பின்னிணைப்பையும் உள்ளடக்கியது.[2]

  1. அறிமுகம்
  2. யாழ்ப்பாணத் தமிழ்க் கல்விப் பின்னணி
  3. 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு
  4. தமிழ்க் கல்விப் பாடத்திட்டம்
  5. தமிழ்க் கல்வி கற்பிக்கப்பட்ட முறைமை
  6. ஆசிரியர், மாணவர் நிலை
  7. தமிழ்க் கல்வி ஏற்படுத்திய தாக்கம்
பின்னிணைப்பு

குறிப்புகள்

  1. சிவலிங்கராசா, எஸ்., சிவலிங்கராசா, சரஸ்வதி., 2008. பக். 5.
  2. சிவலிங்கராசா, எஸ்., சிவலிங்கராசா, சரஸ்வதி., 2008. பக். x.

இவற்றையும் பார்க்கவும்